அனுபவங்கள்

வருவேன் உன்னைக் காண...

நாளை,
காலைப் பொழுதில்,
வைகறையில்,
ஒளிபரவும் நேரத்தில்
கிளம்புவேன் நான்.
எனக்காகக் காத்திருப்பாய் நீ.
எனக்குத் தெரியும் அது.
உனக்குத் தெரியுமா?
கடப்பேன் காட்டை
கடப்பேன் மலையை
உனக்கு வெகு தூரத்தில்
என்னால் நீண்ட நேரம்
காத்திருக்க முடியாது.
என் எண்ணங்களின் மேல்
கண் வைத்து, வெளியில்
எதையும் பாராமல்
ஒலிகள் எதையும் கேளாமல்
யாரும் அறியாதவனாய்
வளைந்த முதுகுடன்
கட்டிய கைகளுடன்
நடப்பேன் நான்.
பகல் எனக்கு
இரவு போன்றது.
மங்கும் மாலையின்
பொன்னிறத்தையோ
தொலைவில், ஆர்ப்ளேர் (Harfleur)
நோக்கிச் செல்லும் கப்பலின்
பாய்களையோ நான் பாரேன்.
உன்னருகில் வந்தவுடன்
பூங்கொத்து ஒன்றை வைத்திடுவேன்
உன் கல்லறைமேல்!
------ Victor Hugo

ப்ரெஞ்ச் தேசத்து கவிஞனின் காதல் கவிதை. தன் காதலியின் மரணத்தை தாங்கிக் கொள்ள இயலாத விக்தோர் தன் முதுமைக் காலத்திலும் எஸ்தருக்காக நினைத்து எழுதிய கவிதைகளுள் ஒன்று தான் இவை. தன் காதலியின் கல்லறையைக் காண வரும் முதுமையின் விளிம்பில் நிற்கும் காதலன் தன் வளைந்த முதுகுடன் கோர்வை கோர்வையாக வரும் காதலியின் நினைவில் பூங்கொத்துக்களுடன் கல்லறையை நோக்கி....

தமிழச்சி
11.02.2003

 

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel