கிறுக்கல்கள்

சாதித்தோல்...

images_3

பறைத் தோலை 
உறித்து
சாதித் தீயில்
வீசியெறிந்தபோதும்
தோல் விரைவாய் விரிந்து
பறைச்சீ ச்சீய்.. ச்சீய்...
என எக்காளமிடும்
சாதிய சமுதாயமே...

மொத்தமாய்
உயிர்த்தீயை எரித்து வைக்க
எந்தத் சாதியற்ற
தீ விற்பனைக்கு உள்ளது?

ஒரு பறை
இடுகாட்டு தீயில் எரிய
விரைவாய் விரிகிறதே
பறைத் தோல்
எங்கே இருக்கிறது அதன் சூட்சமம்?

தமிழச்சி
10.12.2010

 

என்னிடம் இருப்பது ஆண்குறி...!

BalancingTwoWorlds24hx9wx9d134956__134956


எனக்கு பசித்த போது...
சமைத்து போட வேண்டும்...!
குளிப்பதற்கு சுடுநீர்...
வைத்து கொடுக்க வேண்டும்...!
அழுக்கான உடையை...
துவைத்துப்போட வேண்டும்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் ஆண்மைக்கு வாரிசாக...
பிள்ளை பெற்றுப் போட வேண்டும்...!
நான் அடித்தால் அடிவாங்கிக் கொண்டு...
அடங்கிப் போக வேண்டும்...!
என் பெற்றோருக்கும்...
ஏவல் செய்ய வேண்டும்...!
எங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்...
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் குறி விரைத்துக் கொண்டால்...
உன்னிடமும் வரும்...
தேவைப்பட்டால் மற்றவரிடமும் செல்லும்...
என் குறிக்கு கற்பு கிடையாது...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

மொத்தத்தில்...

எனக்கென்ற தனித்துவம் இருக்கின்றது...!
வலிமை இருக்கிறது...!
அடக்கி ஆளும் தலைமை இருக்கின்றது..!
எனக்குள் எல்லாம் இருக்கிறது...!
உன்னைவிட நானே உயர்ந்தவன்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!


தமிழச்சி
16.09.2008





 

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel