"அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது." - ´ஸிக்மண்ட் ஃபீராய்டு´ [Sigmund Freud] [மனத்தத்துவ ஆராய்ச்சியாளர்.
புணர்ச்சியின் வரம்பற்ற நிலைகளே மனிதனின் இயல்பென்றும், அதுவே நாகரிக மனிதனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்றும், சமூகத்திடம் கட்டுப்பாடுகளை கட்டுடைக்க முற்படும் போது முதல் கட்டுடைப்பு பாலுணர்வுக்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என்பதே. அதுவே மனித நாகரீகத்தின் அந்தஸ்துக் குறியீட்டாகவும் (Status Symbol) சிலர் நினைக்கின்றனர். அதன் வீரியம் எந்தளவுக்கு ஒரு சமூகத்தை தாக்கத்திற்கு உள்ளாக்குகிறது என்பதை அனுபவம் சொல்லும் போது, கோட்பாடுகளை கட்டுடைப்புகள் வரைமுறைக்குள் மீண்டும் கொண்டு வருகிறது; நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அறநெறி.
வாழ்வில் எழுதப்படாத சட்டங்களாக மனித குலத்தின் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்லும் அறநெறிக் கோட்பாடுகளுடன் மனிதன் முரண்படும் போதெல்லாம் தோற்றுக் கொண்டே இருக்கின்றான். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்தில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு விதிக்கப்பட்ட தடை..
என்றாயிற்று கலிபோர்னியாவில்?
கலிபோர்னியாவையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் பற்றி பேசுவதற்கு முன் மனிதன் என்பவன் யாரென்றும், அவனுடைய செயல்பாடுகளையும் கொஞ்சம் பார்ப்போம்.
"கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கடற்கரையோரத்தில் ஆழங்குறைந்த நீரில் சூரிய ஒளிக்கதிர்களின் தொடுகை விசேஷத்தால் சில மூலக்கூறுகள் இணைந்து 'புரதத் துகள்' ஒன்று உருவாகிறது. அத்துகல்களில் இருந்த மூலக்கூறுகள் இரண்டாயிற்று, நான்காயிற்று, எட்டாயிற்று..."
இப்படியே அதன் தன்னாற்றல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த தன்னாற்றலில் இருந்தே (உயிரற்ற மூலங்கள்) உயிர் இயக்கம் கொண்ட 'வஸ்து' உருவாகிறது. இந்த புரதப் பிண்டமே "உயிர் வர்க்கத்தின் தொடக்கம்" என்று விஞ்ஞானம் சொல்கிறது.
நீரில் தோன்றிய உயிர்த்துகளே கோடான கோடி ஆண்டுகளுக்கு பின் அமீபாப் பூச்சியாகவும், பின் மீனாக, தவளையாக, பறவையாக, பாலூட்டும் மிருகங்களாக, மனிதனாக பரிணாமம் அடைந்திருக்கிறது.
"விஞ்ஞானத்தில் மனித பரிணாமத்தை குறித்து ஓர் வரைப்படம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம். அதில் பல கிளைகள். மரத்தை உயிராகவும், அதிலிருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு கிளை பறவைகள், மற்றொரு கிளை பாலூட்டும் பிராணிகள், ஒரு கிளை மனித இனம். இப்படி உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதை உணர்த்தும் வரைப்படம்.
"அமீபாப்பூச்சியில் பாக்டீரியாவில் துடிக்கும் உயிரே மனிதனுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது" என்று விஞ்ஞானம் உயிர்தோற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. மனித இனம் எப்போதுமே சோதனை செய்தல், தவறை உணர்தல், மீண்டும் சோதித்தல் என்ற முறையைப் பின்பற்றியே (Trial and error) முன்னேறி வந்துள்ளது. "அமீபா மனிதனின் குளறுபடிகளை"த் தான் நாம் வரலாறுகளாகவும் பார்க்கிறோம். எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்தாலும் 'அமீபா மனிதனின்´ ஆக்கிரமிப்பாகிய மூர்க்கத்தனத்தை மாற்ற முடியாமல் இருக்கிறது. எங்கே தவறு நடந்திருக்கிறது? வரலாற்றை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த கால எச்சங்களில் எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டுவருகிறோம். அப்படித்தான் ஓரினச்சேர்க்கையையும் ஆராய வேண்டியுள்ளது. "அமீபா மனிதனின் மன வக்கீரங்கள்" காமத்தில் மிருக நிலைக்கும் கீழே போய்விட்டது. ஆதிகால மனிதன் "கற்பு" என்ற சொல்லுக்கு அர்த்தம் உருவகப்படுத்தாத காலகட்டத்தில் உடன் பிறந்த சகோதிரிகளையும், பெற்ற தாயையும், மகனையும், மகளையும் புணர்ந்தார்கள்.
யாச்சோபின் என்ற வரலாற்று ஆய்வாளர் மதம் தோன்றுவதற்கு முன்பு இருந்த சமூக நிகழ்வுகளை, சராசரியாக பண்டைகால மக்களிடம் காணப்பட்ட விசித்திர வழக்கங்களை ஆதரங்களுடன் விளக்குகிறார். ´ஓடின்´ தன் மகள் பிரிக்காவுடன் இணைந்தது வம்ச விருத்திக்காக.
எகிப்திய நாட்டு தேவன் தன் தாயை மணந்ததும், லீசியார், எட்ருஸ் கானர், சிரீட்டர், அத்தீனியர், லெஸ்பெயின்கள், எகிப்தியர்கள் முதலியவர்களுக்குள் பலர் பலருடனும் புணர்ந்து வந்திருக்கின்றனர்.
மதம் தோன்றிய காலகட்டத்தில் பாபிலோன் நகரித்தில் பெண்கள் பருவமடைந்தால் ஏதேனும் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தில் யாராவது ஓர் ஆணுடன் சேர்க்கையில் ஈடுபட்டு தன்னுடைய கன்னித்தன்மையை அழித்துக் கொள்ளும் சடங்கை புனிதமான மதச்சடங்காக கருதி இருக்கின்றனர்.
மெம்பிஸ், அர்மீனியா, டயர்சி, டோன் - போன்ற பிரதேசங்களிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாக யாச்சோபின் குறிப்பிடுகிறார்.
லிபியனைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களுடன் இணைந்து திருமணத்திற்கு கொடுக்க வேண்டிய சீதனத்தை சம்பாதித்ததாகவும் காணப்படுகின்றது. யார் அதிகமான சீதனங்கள் வைத்திருக்கிறார்களோ அப்பெண்களையே மணக்க விரும்பி இருக்கின்றனர் ஆண்கள். திருமணத்திற்கு பிறகு மற்ற ஆண்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. தாரசிய இனத்தினருக்குள்ளும் இவ்வழக்கம் இருந்திருக்கிறது.
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசி விபச்சாரத்தில் சேர்த்த பணத்தில் தனக்கென ஒர் பிரமீட் (Pyramid) கட்டியதாக வரலாறுகள் உண்டு.கி.மு 66-இல்
அரேபிய நாட்டில் அண்ணன் தங்கைகளிடம், தாய் மகன்களிடம், புணர்ச்சியில் ஈடுபட்டதாக ´ஸ்ட்டாபோ´ என்ற வரலாற்று அறிஞர் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.
வம்ச விருத்திக்காகவும், முறைக்கேடான முறையில் புணர்ச்சிகள் இருந்திருக்கின்றன. பின் ஓரளவு நாகரிகமடைந்த மனிதன் தாயையும், சகோதரியையும், மகளையும் புணர்வது அநாகரிகமானது என தவிர்த்தான். குழுக்களாக சிறு சிறு இனங்களாக திரிந்த மனிதக் கூட்டங்களை அரசாட்சிகள் ஆள ஆரம்பித்த கட்டங்களில் கூட மனிதனின் காமப்பசி வேறு திசைகளில் திருப்பி விடப்பட்டது.
ஆக்கிரமிப்பு வேகமும் (Aggressive Instinct) காம வேகமும் (Sex Instinct) வன்முறைகளாகவும் மாறி இருக்கிறது. இலியது - கிரேக்க காவியத்தில் பார்த்தோமானால் ´பாரிஸ்´ என்னும் ´ட்ராய்´ (Troy) இளவரசன் அக்கேய கிரேக்கர் தலைவனாகிய மெனிலாஸின் என்பவனின் மனைவி ஹெலன் மீது ஏற்பட்ட காமத்தால் கடத்திச் செல்ல, ஆத்திரமடைந்த கிரேக்கர்கள் ஆயிரம் போர்க்கப்பல்களில் சென்று ட்ராய் நகரத்தை முற்றுகையிட்டு 10-ஆண்டுகள் யுத்தம் செய்து லட்சக்கணக்கில் போர் வீரர்கள் இறந்து, இறுதியில் ஹெலன் மீட்கப்பட்டாள். பின் ட்ராய் நகரத்தையே தீ வைத்து அழித்தனர் கிரேக்கர்கள். இவை பெண் ஆக்கிரமிப்பால் நடந்த வரலாற்றுப் போர்களில் முதலாவதாக சொல்லப்படுகிறது. இராமாயணக் கதைகள் எல்லாம் இதற்கு பிறகு நடந்திருக்கிறது. இராமாயணமும், மகாபாரதமும் உடாண்ஸ் காவியம். அப்படி ஒரு நிகழ்வுகள் நடந்திருக்கவே முடியாது என்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பது போன்று ´டராய்´ நகரச் சம்பவங்களும் கற்பனை என்றும் சொல்லுவதுண்டு. ஆனால் ஹெலனின் கற்பைச் சோதிக்க கணவன் மெனிலாஸின் நெருப்பில் இறங்கச் சொல்லியிருக்க மாட்டான் என்று நம்புவோமாக...
நம்நாட்டில் இராமாயணமும், மகாபாரதமும் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவை இரண்டு பெண்கள். சீதையை அக்கிரமித்ததற்காக எழுந்த போர் இராமாயணம். திரெவுபதியை சேலையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியதில் தொடங்கியது மகாபாரதப் போர். வக்கீரக்குணம் எல்லை மீறும் போது அங்கே ´அறநெறி´ ஆவேசப்படுகிறது. இவை மனித வாழ்க்கை முழுவதும் எழுதப்படாத சட்டமாக இயங்குகிறது அல்லது சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணங்கள்.
மனிதன் ஒரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கோட்பாடுகள் வேறொரு காலத்திற்கு அநாகரிகமாகவும், விமர்சனத்திற்கும் உள்ளாவது போல் மனிதனின் பால் உணர்வுகளை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று முதன் முதலாக வலியுறுத்தியவர்கள் யூதமதத்தைச் சார்ந்தவர்களே. தாய், மகன், மகள், தந்தை குறித்த உறவுகளுக்கென்று பண்பை உருவாக்கியது யூத மதம். தாய் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்பட்டாள். இவையெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்கள்.
´மோசஸ்´ உருவாக்கிய பத்துக்கட்டளைகள் யூத மக்களிடம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியது. அய்ரோப்பாவில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பு செல்த் (Celte), த்யூத் (Druide) போன்ற மதங்கள் இருந்தன. அக்காலக்கட்டங்களில் குறுநில மன்னர்களையும் விட மதகுருமார்களிடம் செல்வாக்கு அதிகமிருந்தது. மன்னர்களுக்கு அலோசனைகளை வழங்குவதும் மதகுருமார்களே. மன்னர்கள் போர்க் காலங்களில் வேற்று நாட்டுக்கு செல்லும் போது அதிகாரங்கள் மதவாதிகளிடம் இருந்தன. பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் மனைவிமார்களை விட்டு வெளியூருக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் இதர ஆண்களோடு கலவிச் சேர்க்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக இரும்பினால் ஆன உள்ளாடையை [ஜட்டி மாடலில்] போட்டு பூட்டி வைக்கும் வழக்கமும் ஏற்பட்டன. மன்னர்களும், சீமான்களும் இம்முறையைக் கையாண்டனர். தங்கள் வாரிசில் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தீவிரமான முறைகளை கடைப்பிடித்தனர். அந்தப்புரத்தில் இருக்கும் காவலாளிகள் அங்கிருக்கும் பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்குறிகள் வெட்டப்பட்டன. 10-இல் 3-பேர்கள் பிழைப்பதே மிக அரிதானதாக இருந்தன.
அதே போல் போர்க்களத்தில் இருந்த வீரர்கள் நெடுங்காலமாக புணர்ச்சியில் ஈடுபடாததால் தங்களுடன் இருந்த வீரர்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். ஓரினச் சேர்க்கை அதிகரிக்க இவையும் ஒரு காரணமாகும். இன்றும் கூட சிறைக்கைதிகளும், இராணுவத்தில் இருக்கும் வீரர்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வழக்கத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்பு இருந்தது.ஓரினச் சேர்க்கை தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுவது உண்டு.
ஆடையில்லாமல் வாழ்ந்த மனிதன் தன் உடலை அழகுப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் வந்த போது தன்னை அழகுப்படுத்தி இரசிக்க ஆரம்பித்தது நாளடைவில் தன்னைப் போன்றே அழகுணர்ச்சியுடன் அழகுப்படுத்திக் கொண்டுள்ள மனிதனிடம் ஏற்பட்ட அதீத ஈர்ப்பும் அதை இரசித்துப் பார்த்தும் தடவிப் பார்த்ததிலும் ஏற்படுத்திய சிலிர்ப்புகளில் புணர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் சொல்லுவதுண்டு.
´கிரேக் ஆண்டிக்´ இனத்தினர் முதல் முதலாக தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகின்றது. இக்காலகட்டத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருந்திருக்கின்றனர். ஆண் ஆணை புணர்வதும், பெண்ணை பெண் புணர்வதும் அல்லது சில ஆண்களுடனும் பெண்களுடனும் இணைந்து புணரும் இருபால் சேர்க்கையும் தோன்றியது. ரோமபுரி நாட்டிலும் அடுத்து அரபு நாடுளிலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் இருந்திருக்கிறதாக வரலாறுகளில் காணப்படுகின்றன.
'அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண்´ உலகம் முழுவதும் தன் செல்வாக்கால் கிறிஸ்துவ மதம் பரவ காரணமாணவன். உலகத்தையே தான் காலடிக்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்காரத்துடன் திரிந்தவன். தன் செல்வாக்கை பல தவறான வழிகளில் பயன்படுத்தி மோசமான அடையாளத்தை வரலாற்றில் பதிவு செய்தவன். அளவுக்கு அதிகமான பெண்களை அனுபவித்து அனுபவித்து சலித்துப் போய் முதல் முதலான ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட ஆரம்பித்தான். வரலாற்று ஆதாரப்படி உலகில் இவனே ஓரினப்புணர்ச்சியில் முதல் ஆளாய் அடையாளப்படுத்தப்படுகிறான்.
பால் புணர்வுகள் கட்டுக்குள் அடக்கப்பட்ட காலக்கட்டங்களில் பெண்கள் மீதும் அதிக திணிப்புகளும், ஆதிக்கமும் செலுத்த ஆரம்பித்த காலகட்டங்கள் அவை. அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண் பெண்களுடன் புணர்ச்சி செய்வதில் வெறுப்பேற்பட்ட பின், பெண் சேர்க்கையில் அதீக ஆர்வம் காட்டினால் பிசாசு பேய் புகுந்திருப்பதாக உயிரோடு நெருப்பில் போடப்பட்டாள். அதற்கு காரணமானவன் அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண்.
இப்படி அனேக யுத்தங்கள் முறையற்ற காமத்தாலும், வன்மையாலும், ஆக்கிரமிப்பாலும் நடைப்பெறுவதும், மறுபுறம் பொது மக்களிடமும் தீராக் காமமும், அதனால் நடக்கும் அடிதடிகளையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த மனவியல் ஞானி ´ஸிக்மண்ட் ப்ராய்டு´.... "காம வேகமும், ஆக்கிரமிப்பு வேகமும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் உந்து சக்திகளுக்குள் முதன்மையானது" என்றார். முதலில் இக்கோட்பாட்டை ஏற்க மறுத்தது மருத்துவ உலகம். ப்ராய்டு கிண்டல் செய்து பழிக்கப்பட்டார். நாளடைவில் அக்கோட்பாட்டின் பலத்தை மனஆராய்ச்சி செய்யும் மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது. இன்று ´Psychatry´ என்னும் மனநோய் சிகிச்சை மருத்துவம் பெருவளர்ச்சி அடைந்திருக்கிறது.
[2]
"இயற்கையின் பரிணாம சக்தியின் மாபெரும் படைப்பு மனிதனை உருவாக்கி வைத்திருப்பது. மனிதனின் உடல்கூறு வேகமும் [Somatic], மரபுக்கூறு வேகமும் [Genetic] ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதே, இன்றைய ஆராய்ச்சியின் மையப்புள்ளி." - [ஜோனாஸ் சால்க், ´உயிரியல் ஆராய்ச்சிப் பேரறிஞர்´]
´அமீபா மனிதனின்´ ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலை காலத்தில் மனிதர்களுக்குள் வளர்ந்த பகுத்தறிவுச் சிந்தனை புணர்ச்சிகளை வரையறுக்குள் கொண்டுவந்தது. கட்டுப்பாடுகளை மீற முற்பட்ட மனிதன் சமுகத்திற்கு தெரியாமல் தன் இச்சைகளை தீர்த்துக் கொள்ள முனைந்தான். சட்டங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் அத்துமீறல்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டன. தண்டனைகள் ஒவ்வொரு சமுகத்திலும் [நாடுகளில்] அவரவர் கடுமையான சட்ட விதிகளின்படி மனிதன் தண்டிக்கப்பட்டான். ஆகையால் மனிதனின் செயல்பாடுகள் கட்டுக்குள் இருந்தன. புணர்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மனிதனை பல்வேறு தவறான அணுகுமுறைக்கு கொண்டுச் சென்றது.
மருத்துவ உலகம் புணர்ச்சிகளில் ´இயற்க்கைக்கு முரணானது, எதிரானது´ போன்ற கோட்பாடுகளை, ´மதம்´ போல் முன்வைக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்புக்களையும், மனிதனின் சிந்தனைகளில் தூண்டும் வன்மமும், குரூரமும் குறித்து எச்சரிக்கை செய்கிறது. மனிதனின் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் வரம்புக்கு மீறிய புணர்ச்சி உணர்வுகள் கேடானது என்கிறது. புணர்ச்சியாளர்களை மருத்துவ உலகம் மூன்று வகைப்படுத்துகிறது.
1.ஆணும், பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடுவது. 2.பெண்ணும் பெண்ணும் [Lesbian] அல்லது ஆணும் ஆணும் புணர்ச்சியில் ஈடுபடுவது [Homo Sex]
3.ஆண்கள், பெண்கள் என இருபால்உணர்ச்சியாளர்களும் [bisexuals] இணைந்து குரூப் செக்ஸில் ஈடுபடுவது [group sex]´Homo´ [ஹோமோ] என்ற வார்த்தை கிரேக்க மொழியாகும். ´Homo´ என்றால் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம்.
மருத்துவ உலகம் குறிப்பிட்ட 3-புணர்ச்சி வகைகளையும் மீறி பலவகைகளில் அதிகரித்துப் போய்விட்ட புணர்ச்சிகளுக்கு என்ன ´குறியீடு´ வைப்பது என்று தடுமாறிப் போய்விட்டது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உளவியல் நிபுணரான ´கார்ல் மரியா பென் கெர்ட்´, ´ஹோமோ செக்ஸ்´ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். கிரேக் நாட்டில் இருந்த ´லெஸ்போஸ்´ [Lesbos] என்ற தீவில் கி.மு 7-ஆம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் சேர்க்கையில் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞரான ´ஸாப்போ´ என்பவர் அத்தீவு குறித்தும், பெண்களின் சேர்க்கை குறித்தும் எழுதி இருந்த கவிதைகளில் ´லெஸ்போஸ்´ என்ற வார்த்தை அதிகமாக காணப்பட்டது. அவையே பின்னாலில் பெண்கள் ஒரினச்சேர்க்கைக்கு "லெஸ்பியன்" என்ற குறியீட்டு சொல்லாக வழக்கத்துக்கு வந்தது.
கிரேக், ரோம் போன்ற நகரங்களில் ஒரினச்சேர்க்கை தவறாக பார்க்கப்படவில்லை. கி.மு வரை இந்நிலைமையே இருந்து வந்தது. கி.பி4-ஆம் நூற்றாண்டுக்கு பின் ஒரினச்சேர்க்கையாளர்கள் மீது இருந்த அங்கீகாரம் இந்நாடுகளில் மாறத் தொடங்கியது. இயற்க்கைக்கு புறம்பான பாலீயல்கள் பாவகரமான செயலாக கூறியது மதம்.19-ஆம் நூற்றாண்டில், "ஒரினச்சேர்க்கை என்பது மனநலம் பாதிக்கும் உறவானது மட்டுமல்லாமல் உடல்நலத்திற்கு கேடானது என்றும், பல தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடியதும், மனவக்கீரங்களை அதிகரிக்கச் செய்து மனிதர்களை கட்டுப்பற்றவர்களாக மாற்றச் செய்து சமூகத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்" என்று மருத்துவ உலகம் சொல்லிவிட்டது.
இக்காலக்கட்டங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த மாவீரன் நெப்போலியன் 1804- ஆம் ஆண்டில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறல்ல என்று சட்டம் கொண்டு வந்தார். [நெப்போலியன் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்]ஐரோப்பாவில் மக்களாட்சி வந்த போது சட்டங்கள் மாற்றப்பட்டன. அதில் ஒரினச்சேர்க்கை குற்றமாக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து - போன்ற நாடுகளில் ஒரினச்சேர்க்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கபுரி என அழைக்கப்படும் நாடு "ஸ்பென்." 1975-இல் பிரான்சிஸ்கோ பிரான்கோவின் மறைவுக்கு பின் [இவர் இராணுவ ஆட்சி என்னும் பெயரில் சர்வாதிகாரத்தனத்தில் ஆண்டவர்] ஜனநாயக ஆட்சியில் 1979-ஆம் ஆண்டு செக்ஸ் சுதந்திரத்திற்கு அதிக உரிமை கொடுக்கப்பட்டது. ஓரினச்சேர்கையாளர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் அளித்தது.
நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளுக்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டது. ஸ்பெயினில் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரம் பெற்றது ஓரினச்சேர்க்கை. கத்ரோலிக்கர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் அவர்களின் எதிர்ப்புக் குரல் பெரியதாக ஒலிக்கவில்லை. 1985-க்கு பின் ஸ்பெயினில் ´கூட்டுக் கலவி´ [Bisexual] புணர்ச்சிகள் அதிகரித்தது. ´ஈஸ்டர் கார்சியா´ என்னும் அரசியல் ஆய்வாளர் ஸ்பெயினில் பொருளாதாரத்தை விட செக்ஸ்சில் அதிக சுதந்திரம் இருக்கிறது. இவை மக்களுக்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும் சிந்தனையையும் சிதைத்துவிடக்கூடும் என்று எச்சரித்தார். அவர் கூற்றுப்படியே அதிக சுதந்திரம் குரூப் செக்ஸ் வரையில் அதிகரிக்கச் செய்த போது அரசாங்கம் விழித்துக் கொண்டது.
ஸ்பெயின் பிரதமரான ´ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ்´ சமூதாயச் சீர்திருத்த நடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்ற போது "சமூதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மக்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட ´கூட்டுக்கலவி´ [Bisexual] முறையில் வெளிப்படையாக பேச இயலவில்லை. அமீபா மனிதனின் உச்சகட்ட வெறித்தன்மையாக கூட்டுக்கலவியின் ஆண் பெண் இருபாலரின் புணர்ச்சிகளை குறித்து மருத்துவ உலகம் கடும் விமர்சனங்களை முன் வைத்ததும் ஒரு காரணம்.
ஆணுடன் ஆண்; பெண்ணுடன் பெண் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை திருமணங்கள், அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளின் மனநிலைகள் குறித்து அதிகம் விவாதத்திற்குள்ளானது. ஸ்பெயின் பிரதமரான ´ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ்´ சமூதாயச் சீர்திருத்தநடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்றபோது, "சமூதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தைமுடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஓரினச் சேர்க்கையாளர்களின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை மறுபரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஸ்பெயின் சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரினச்சேர்க்கையின் திருமணத்தை ஆதரிக்கும் போது நாளை கூட்டுக்கலவியாளர்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் நடக்கிறது. அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கும் போது நாங்கள் இருபால்புரணர்ச்சியாளர்கள்; ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாடு ´மனித உரிமை மீறல்´ யார் யாரோடும், எத்தனை பேரோடும் இருபாலுணர்ச்சிகளில் புணர்வதற்குசட்ட அங்கீகாரம் கோரினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியில் ஸ்பெயின் அரசாங்கம் குழம்பிப் போய்கிடக்கிறது. அப்படி யாரும் இன்னும் தைரியமாக முன் வந்து வாதங்களைவைக்கவில்லையானாலும் நாளை என்ன நடக்குமோ?
ஸ்பெயின் நாட்டின் கதை இப்படி போய் கொண்டிருந்தால் கனடாவை கொஞ்சம் ´நோட்டம்´ விட்டு வைப்போம்...
2003-இல் கனடாவில் பிரதமாக இருந்த ´ஜான் கிறச்சியன்´ ஐரோப்பாவில் சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிப்பட்டுள்ளதைப் போல் கனடாவிலும் விரைவில் ஓரினச்சேர்க்கைக்கு சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த போது கட்சிக்குள்ளிருந்தும் பொது மக்களில் பெரும்பான்மையோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கம் போல் கட்சிக்குள் கருத்துப்பிளவுகள். ஆனால் தற்போதைய பிரதமரான ´போல் மார்ட்டின்´ - ஜான் கிறிச்சியன் கருத்தை ஆதரித்தார்.
2003-இல் நிறைவேற்ற முடியாத தீர்மானத்தை போல் மார்ட்டின் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தினத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பதுப்பற்றி கருத்துக்கணிப்பும் நடைப்பெற்றது. கருத்துக்கணிப்பு நடைப்பெறுவதற்கு முன்பே கனடாவில் 10-மாநிலங்களில் Alberta, Ontario, Nova Scotia, Ontario, Newfoundland Labrador Manitoba, British Columbia, Quebec- ஒரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது.
பிரான்சில் சில வருடங்களுக்கு முன்பு 'போர்தோ' என்னும் இடத்தில் ´பேகல்´ என்ற ஊரைச் சேர்ந்த மேயர் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்ததால் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சிறை தண்டனை கொடுத்த சம்பவமும் உண்டு.
ஒரினச் சேர்க்கையாளர்களின் சமஉரிமைப் பிரச்சனைகளும், சட்ட ரீதியான அங்கீகாரமும் ஒவ்வொரு நாட்டிலும் தலையை எதிலாவது முட்டிக் கொள்ளத் தோன்றும் அளவுக்கு மிஞ்சிப் போகிறது. அட, "பரவாயில்லையப்பா நம் நாட்டில் இதெல்லாம் கிடையாது என்று நிம்மதி மூச்சு விடுபவர்களுக்காக"....
"இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10-ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்" *[இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு:377]
இச்சட்டம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் பிரச்சனையை கிளப்பியது. இச்சட்டத்தை எதிர்த்து டெல்லியில் இருக்கும் ´நாஸ் அறக்கட்டளை´ உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்தியச் சட்டம் 377-இப்பிரிவின்படி அதிகப்பட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வரை வழங்கலாம். இந்தியாவில் இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இச்சட்டம் அநீதி இழைப்பதாக கூறியுள்ளது.எழுத்தாளர் விக்ரம் சேத், நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென், அருந்ததி ராய் உள்பட மற்றும் சிலர் இந்தியச் சட்டம் 377-குறித்து விமர்சனங்களை வைத்தனர். இச்சட்டத்தினால் அரவானிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடியதாக இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
2006-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மட்டும் 24-லட்சம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இதில் எட்டு சதவிதத்தினரை மட்டுமே அடையாளங் காணமுடிவதாக சொல்லப்படுகின்றது. இந்தியாவில் முதல் முதலாக ஓரினச்சேர்க்கைக்கு எதிரான இந்தியச்சட்டப் பிரிவு 377-ரத்து செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை - மத்திய சுகாதார பிரிவு, குடும்ப நல துறையும் கலந்தாலோசித்தன. முடிவில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-தடை செய்யப்பட்டது. ஆனால் ஒரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சென்ற வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இரு பெண்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களே இந்தியாவில் முதலாவதான ´ஒரினச்சேர்க்கை தம்பதிகள்.´ [தமிழில் வேறு எப்படி சொல்வதென்று தெரியவில்லை]
நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தைரியமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் ஒரினச்சேர்க்கையாளர்கள் குறைவு தான். அதே போல் கூட்டுக்கலவி பற்றி பேசும் இருபால்புணர்ச்சியாளர்களில் ஆண்கள் துணிந்து கூட்டுக்கலவி பற்றி பேசினாலும், இந்தியாவிலும் உலகில் இதர பகுதிகளிலும் அதில் ஈடுபடும் பெண்கள் தங்களை ´இருபால் புணர்ச்சியாளர்கள்´ என்று துணிந்து சொல்வதில்லை. இப்படி ஓரினச்சேர்க்கையை குறித்தும், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் அதிகம் தற்போது பேச வைத்ததற்கு காரணம், "கலிபோர்னியாவில் அண்மையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணச் சட்டத்தை ரத்து செய்தது."
"ரத்து செய்யும் உரிமையை அரசாங்கம் எடுக்கவில்லை." மக்களின் ஓட்டெடுப்பில் விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. 20-வருடங்களுக்கு முன்பு இதே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் மற்றும் சிறுவர்களை தத்தெடுத்து வளர்க்கும் போக்குகள் குழந்தைகளின் மனநலம் குறித்த விவாதங்கள் ஒரினச்சேர்க்கையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அதிகமான விவாதங்கள் எதிர் காலம் குறித்த எச்சரிக்கை உணர்வுகள் ஒரினச்சேர்க்கையாளர்களை தனி மனித சுதந்திர உணர்வுகளை நாங்கள் தலையிடவில்லை. ஆனால் சட்டரீதியான அங்கீகாரங்கள் அளிப்பதை எதிர்க்கிறோம் என்கின்றனர்.
இப்படி கலவியல் பிரச்சனைகள் பெரும் பிரச்சனையாக சமூகத்தை ஊடுறுவி நிற்கும் போது, மனிதனுக்குள் இருக்குள் "அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது." என்று ´ஸிக்மண்ட் ஃபீராய்டு´ சொல்லியவைகளை நாம் கடக்க வேண்டியிருக்கிறது!
தமிழச்சி 15/11/2008

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். மானுட மதிப்பீடுகள் உரிமைகள் அனைத்து மனிதர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியவைகள் என்னும் முழக்கம் முடியாட்சிகள் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒளித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் நாம் ஜனநாயகத்தில் மக்களாட்சியில் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அடைந்திருக்கிறோமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க மானுட மதிப்பீடுகள் என்பது ஒவ்வொரு தனி தனிதனின் மரபணு தரத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறிக் கொண்டு வேறு கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்து விட்டது விஞ்ஞானம்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்க வந்துவிட்டானே விஞ்ஞானி என்று புலம்புவதா என்ற குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது. மரபணுப் பொறி இயல் (Genetic engineering) என்ற கண்டுப்பிடிப்பு மனிதனின் கையில் கிடைத்துவிட்டது. ஜீன்களைக் கட்டுப்படுத்தி எதிர்கால மனித இனம் என்பது இப்படித்தான் அமைய வேண்டும் என்று திட்டமிட்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று சில விஞ்ஞானிகளும், "அபாயம், ஆபத்து மனிதகுலத்திற்கு இது கூடவே கூடாது" என்று வேறு சிலரும் ஆரம்பித்து விட்டார்கள்.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ´ஹெர்மான் முல்லர்´ சொல்கிறார்:
"மனித மேம்பாடு திட்டங்கள் குறித்த மானுடப் பரிணாமத்தை நெறிப்படுத்த நமக்கு அரிய வாய்ப்பு அளிக்கின்றன. மனிதனுடைய மரபணுவில் எல்லையில்லாத முன்னேற்றம் காணும் காலம் வந்துவிட்டது. இதன் மூலம் மனிதப் பண்பாடு வளரும்; அதன் மூலம் மரபணுத் தரமும் (Genetic quality) வளரும். இந்த வளர்ச்சிக்கு எல்லை முடிவென்பதே இருக்காது."
ஹெர்மான் முல்லரின் இவ்வார்த்தைகள் சமுதாயப் பொது நன்மையே தனி மனிதர்களின் நலன்களுக்கு மேலாக ஒங்கி இருக்க வேண்டும் என்ற கோட்பாடு உடையவர்களுக்கு மட்டும் ஏற்புடையதாக இருக்கலாம். ஹெர்மான் முல்லரின் கோட்பாடுகளாவது பரவாயில்லை.
´லைனஸ் பாலிங்´ என்ற மற்றொரு விஞ்ஞானி சிக்கிள் - "செல், சோகை போன்ற கொடிய நோய்கள் இருப்பவர்கள் திருமணம் செய்ய அனுமதி கொடுக்கக் கூடாது. அவர்கள் யாரோடும் செக்ஸ் செய்வதை தடுக்க வேண்டும்" என்கிறார்.
இவரும் ஹெர்மான் முல்லர் போல் நோபல் பரிசு பெற்றவர்தான். இருப்பினும் இவருடைய கூற்றுக்கள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒர் அரசாங்கம் எப்படி செயல்படுத்த முடியும்? அதற்கான வழிமுறைகள் யாவை? என்பதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை.
இன்னொரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான 'ஸர். பிரான்சிஸ் க்ரிக்´ "பிறந்த குழந்தையின் மரபணுவை நன்கு பரிசோதிக்க வேண்டும். அதன் மரபணுக் கட்டமைப்புகள் சரியாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். சோதனையில் தேறிய குழந்தைகளையே மனிதப்பிறவி என்ற சான்றிதழ் கொடுக்க வேண்டும். சோதனையில் தவறிய குழந்தைகள் உயிர் வாழும் உரிமையை இழந்துவிடுகின்றன" என்கிறார்.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் இக்கருத்துக்களால் அவர்கள் மனிதத் தன்மையை இழந்தவர்கள் என்ற வாதத்தில் சொல்லிவிட முடியாது. அவர்கள் வேறொரு உலகத்தை சிருஷ்டிக்க முயல்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களையும், திறமையும், அறிவாளிகளையும் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்கிறனர்.
மனிதனுடைய மரபுத் தரத்தை மேம்படுத்த முயலும் விஞ்ஞானிகளின் ஆயாராய்சிகள் புறப்படும் போது; மேன்மையின் இன்னொரு கொடூர முகத்தையும் பார்க்க வேண்டும் என்று பொருமுகின்றனர் இன்னொரு பிரிவினர்.
நியூயார்க் நகரத்தில் இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ´சார்லஸ் ஃப்ரான்கெல்´, ´ஆகா! இப்பவே கண்ணக் கட்டுதே' என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். சார்லஸ் ஃபரான்கெல் அப்படியொன்றும் பழமைவாதி இல்லை. "சிந்தனைப் புதுமைகள் என்றுமே மனிதனிடம் வற்றிவிடக் கூடாது" என்பவர். "ஒவ்வொரு நாளும், நம்மையே திறனாய்வு செய்துக் கொள்ள வேண்டும். அதுவே அறிவான வாழ்க்கைக்கு உரியவை" என்பார்.
பிறகு ஏன் சார்லஸ் ஃப்ரான்கெல் மரபணுசோதனையில் மானுடத்தை மதீப்பீடு செய்ய வேண்டாம் என்கிறார். அவரே சொல்கிறார் :
"அறிவியல் கண்டுப்பிடிப்பு என்று மெச்சிக் கொண்டு நாம் உருவாக்கியவைகள் எல்லாம் தொழில் ரீதியான இயந்திரங்கள். நம் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் என போய்க் கொண்டிருக்கிறது. ஓர் கருவியை உருவாக்கும் விஞ்ஞானி அதன் பயனை நினைத்து உருவாக்குகிறானே தவீர, அதனால் ஏற்படும் தீங்குகளை நினைப்பதில்லை. இதற்கு அதிகமான உதாரணங்களை சொல்ல முடியும். ஆனால், தனி மனிதச் சுதந்திரத்தில் தலையிடும் உரிமையை அறிவியல் தீர்மானிப்பதா? மேன்மையுள்ள உயிர்களை உற்பத்தி செய்யப் போகிறோம் என்று கிளம்பி விடும்போது, குறைப்பாடுகள் உள்ள குழந்தைகள் பிறப்பதால் அவை சமூகத்திற்கு பாரமானவை என்று அவைகளுக்கு வாழும் உரிமையை மறுக்கும் போது; குழந்தை வளர்ந்து தீராத நோய்களுக்குள்ளாக ஆளாகும் போதும் அவைகளுக்கு வாழும் உரிமை மறுக்கப்படுமா? விபத்துக்களினால் ஊனமடைய நேரிடும் மனிதர்களுக்கும் உங்கள் கோட்பாடு பொறுந்துமா?" என கேள்விக் கணைகளாக வீசுகிறார்.
உங்கள் சோதனைகளை எங்கேயிருந்து தொடங்குவீர்கள்? ஏதோ ஒரு ஏழை நாடுகளில் ஆப்பிரிக்க மனிதர்களில் இருந்து உங்கள் வன்முறையை செயல்படுத்துவீர்களா? மனிதக் குல மேன்மையை மட்டும் தீர்மானிக்க விரும்பும் உங்களுக்கு ஏன் எதிர் விளைவுகளை புரிந்து கொள்ள விரும்புவதில்லை என்கிறார்.
சார்லஸ் ஃப்ரான்கெல் கூற்று சிறப்பு மிக்க மனித இனத்தை உருவாக்க ஹிட்லர் போட்ட திட்டங்களுடன் இணைத்து பார்க்கலாம். உடல்வளமும், மனவுறுதியும் அறிவுமிக்க மனிதர்களும் உற்பத்தி செய்ய சிறந்த ஆண்களையும், பெண்களையும் தேர்ந்தெடுத்து ஒன்றாக வாழச் செய்தான் ஹிட்லர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் பெற்றோரைப் போன்ற குண அம்சங்களுடன் இருக்கும் என நினைத்த ஹிட்லருக்கு தோல்வியே கிடைத்தது. அதனால் அறிவியல் முறையில் உருவாக்கப்பட்டிருந்த மரபணு சோதனை மூலம் தெரிவு செய்யப்பட்ட விந்துக்களை தேர்ந்தெடுத்து பொருத்தினால் வெற்றி பெறலாம் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.
பூலோக பிரம்மனாக ஹிட்லர் உருவாக நினைத்துவிட்டானோ என்னவோ? இருந்தாலும் மரபணுச் சோதனைகள் நடந்துக் கொண்டிருக்கின்றது பல வகைகளில். 3-மாதங்களுக்கு உட்பட்ட கரு ஊனமுற்றதாக இருப்பதைக் கண்டுபிடித்தால் கருவிலேயே எடுத்து விடலாம் என்னும் செயல்பாடுகளுக்கு ஐரோப்பாவில் சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்து விட்டது.
அமெரிக்காவில் பிரபலமானவர்களின் விந்துக்கள் கோடிகணக்கில் விலை போகிறது. இன்னாருடைய விந்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு கலவி இல்லாமலேயே பெற்றுக் கொள்ள முடிகிறது. மரபணுச்சோதனை கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு முகத்துடன் சமூகத்தில் உலவ ஆரம்பித்துவிட்டது. பூலோகத்தில் பிரம்மாக்களும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டார்களோ? என்று காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் இன்றைய விஞ்ஞான முன்னேற்றமா என்றும் குழப்பமே மிஞ்சுகிறது.
தமிழச்சி 20/01/2009

"என்ன எழவுடா இது? சும்மா சண்டை, குத்து, வெட்டு, கொலை, உரிமை போராட்டம் என்று புலம்பிக் கொண்டு... "மனிஷனா பொறந்தமா நிம்மதியா வாழ்ந்தமா செத்தமான்னு இல்லாம உலகத்தை நாசப்படுத்தி நிம்மதியை கெடுத்து அதற்கு ´புரட்சி´ என்ற பெயரைக் கொடுத்து வன்முறையை தூண்டிக் கொண்டிருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள் தானா..?" இப்படியொரு ஆதங்கத்துடன் யாராவது நம்மிடம் பேச ஆரம்பித்தால் என்ன நினைப்போம்?
"அடடா... நல்ல மனுஷன். நாட்டு நடப்பு குறித்து எவ்வளவு அக்கறை" என்பதோடு, நம்மையும் ஆமோதிக்க வைக்கும் கருத்தாக்கமாக அவை மாற்றிவிடும் தானே? அங்கேதான் தந்திரம் ஒளிந்துக் கொண்டிருக்கிறது... சோஷியல் ஷாவினிஸ்டுக்கள் போல் இந்த சோஷியல் - ஷாவினிஸ்டுகள் மார்க்ஸிட்டுகளில் இருந்து பிரிந்த போலி மார்க்ஸிட்டுகள். மற்ற இனத்தினர், பிற நாட்டார் மீதும் நிறவேற்றுமை பார்க்கும் பாஸிசம் குணம் கொண்டது சோஷியல் - ஷாவினிஸ்டு.
தங்கள் தேசியத்தின் பெயரால் அயல் தேசத்தினர் மற்றும் வேற்று இனத்தினர் மீது விரோதப் பிரச்சாரம் செய்வது, அப்பிரச்சாரங்களை தங்கள் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் தொடர்புள்ள ஊடகங்கள் வழியாக சிறுகச்சிறுக மக்களிடம் பதிவு செய்வது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் தாக்குதல் தொடுப்பது. இதன் மூலம் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதும் தன்னின முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வெறிக்கு ஆதரவாக இருப்பதும் சோஷியல் - ஷாவினிஸ்ட்டு கொள்கைளாகும்.
1940-இல் இட்லரின் நாஜி படைகள் பிரான்ஸ்சுக்குள் நுழைந்தபோது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோஷியல் - ஷாவினிஸ்டுகள் தங்கள் புத்தியைக் காட்டினர். இட்லரின் ஐந்தாம் படையான பெட்டெயினை உதவி பிரதம மந்திரியாக்கி இனவெறிக்கு ஆதரவாக நின்றனர். தங்கள் சொந்த நாட்டு பிரஜைகளான பிரான்ஸ் கம்யூனிஸ்ட்டுக்கள் படுகொடூரமாக கொன்றனர் சோஷியல் - ஷாவினிஸ்டுகள்.
சோஷியல் - ஷாவினிஸ்ட், ´சோஷியல் - பாஸிச´மாக மாறியது...
வாய் முழுக்க சோஷியலிசம் பேசுவது. செயலோ பாஸிசத்துக்கு உதவியாக இருப்பது. பாட்டாளி மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு ஆதரவளித்துக் கொண்டு முதலாளித்துவத்தை கடுமையாக எதிர்ப்பதுமாக ஜோடனை செய்வது. இதன் மூலம் பாட்டாளி மக்களின் உண்மையான போராட்ட அமைப்புகளையும், தொழிலாளர்களையும் திசை திருப்பி பிளவு ஏற்படுத்துவது. இதற்கான கூலியை முதலாளித்துவம் சோஷியல் - ஷாவினிஸ்ட்களுக்கு கொடுப்பது...
´ஐரோப்பிய சோஷியல் - டெமோக்ரடிக் கட்சி´களின் தலைமைகள் இப்போக்கிலேயே செயல்பட்டன. ´தலையிடா கொள்கை´ பேசிய இத்தாலியைச் சேர்ந்த மூசோலினி, பிராங்கோ போன்றவர்கள் இதற்கு சிறந்த உதாரணம். ஐரோப்பாவில் தொற்றிய ´சோஷியல் - டெமோக்ரடிக்´ அரசியல் தொற்று நோய் இன்று உலகம் முழுவதிலும் அக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
கிட்ட தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தை தொட்டுவிட்ட ´சோஷியல் - ஷாவினிஸ்டு´ உருவாக்கப்பட்டதில் இருந்து இன்றைய காலகட்டம் வரையில் தந்திரமாகவே செயல்படுகிறது.
வன்முறைகளை எதிர்ப்பதாக மக்களிடம் பிரச்சாரம் செய்து அதே வன்முறைகளை மக்கள் மீது நிகழ்த்துவது சோஷியல் ஷாவினிஸ்டு!உதாரணத்திற்கு ஈராக் மற்றும் ஈழத்தின் மீதும் நடத்தப்பட்ட வன்முறைகள்.
அரசியல்வாதிகளால் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் நாம்? இது எப்படி நடந்தது? மக்களிடம் ´சோஷியல் - ஷாவினிஸ்டு´, "வன்முறையால் வன்முறையை அடக்காதே. ஜனநாயக உரிமை உள்ள நாட்டில் உனக்கான உரிமையை அமைதியான முறையில் வென்றெடு. உங்களுக்கான பிரதிநிதிகள் நாங்கள். சட்டங்கள் மூலமாக நமது கோரிக்கைளை வென்றெடுப்போம்..."
இப்படித்தான் மக்களிடம் எழுச்சியை மழுங்கடிக்க ஆரம்பித்தது சோஷியல் ஷாவினிஸ்டு.
சோஷியல் ஷாவினிஸ்டு சித்தாந்தங்களை உருவாக்கியதில் முக்கியமான ´எட்வர்ட் பெர்ன்ஸ்டீன்´ 1899-இல் "சோஷியலிசத்தின் முன் தேவைகள்" என்ற நூலை எழுதிய போது உண்மையான மார்க்ஸியவாதிகளுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தனர்.
மார்க்ஸின் தத்துவங்கள் எல்லாவற்றையும் குத்தி குதறி குழப்பி வைத்திருந்த ஜனநாயக கொள்கைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான வர்க்கப்போராட்டங்கள் குறித்த தத்துவங்கள் எல்லாம் தலைக்கீழாய் போனது.
எட்வர்ட் பெர்ன்ஸ்டீனின் நூல் பிரசுரத்திற்கு பின் மற்ற போலி மார்க்ஸிட்டுக்களுக்கும் உதவியாக இருந்தது. ´எட்வர்ட் பெர்ன்ஸ்டீன்´ காலாவதியான மார்க்ஸியத்தின் பிழைகளை திருத்தி விஸ்தரித்திருப்பதாக கூறிக்கொண்டார்.
"போராடு! அப்பொழுதுதான் ஏதாவது வெற்றி அடைய முடியும்..." என்ற கார்ல் மார்க்சின் வர்க்கப்போராட்டம் குறித்த புகழ்பெற்ற தத்துவத்தையும் தந்திரமாக திசை திருப்பிவிட்டது சோஷியல் ஷாவினிஸ்டு.
"முதலாளித்துவத்திலிருநது சோஷியலிஸத்தை அடைய ஜனநாயம் உறுதி தருகிறது. ஆகவே தொழிலாளர்கள் போராட்டத்தில் உரிமைகளை வெல்வதைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகளின் மூலமே தங்கள் உரிமைகளை வென்றெடுக்கலாம். மார்க்ஸின் வர்க்கப் போராட்டம் இன்றைய கட்டத்திற்கு தேவையில்லாதது. மார்க்ஸியம் காலாவதியாகிய ஒன்று.."
போராட்ட குணத்தில் இருந்து சோஷலிஸம் திசை திருப்பி விட்டது....
இன்றைய காலத்திலும் இதுவே நடக்கிறது.. "நம்முடைய ஆட்சி, நாமே இந்நாட்டு மன்னர்கள்"
"மக்களால் நடைபெறும் அரசியலே ஜனநாயகம். இங்கே அனைவரும் சமம் உங்களுக்கான உரிமைகள் உங்களிடமே இருக்கிறது. எதற்கு போராட்டம்?" அழகாக சொல்கிறது சோஷியல் ஷாவினிஸ்டு!
"மனிஷனா பொறந்தமா நிம்மதியா வாழ்ந்தமா செத்தமான்னு இல்லாம உலகத்தை நாசப்படுத்தி நிம்மதியை கெடுத்து அதற்கு புரட்சி என்ற பெயரைக் கொடுத்து வன்முறையை தூண்டிக் கொண்டிருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள் தானா?
நயவஞ்சகமாக பேசுகிறது மக்களிடம்... "ஜனநாயகம் என்பது போலியானது" கார்ல் மார்க்சில் இருந்து பெரியார் வரை மனித நேய சிந்தனைவாதிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள்...
"போராடு! அப்பொழுதுதான் ஏதாவது வெற்றி அடைய முடியும்..." இதுவே நிதர்சனம்.
தமிழச்சி 04.04.2010
|