அறிஞர்கள்

கனவும், நினைவும்!

"லட்சியக் கனவுகள் நட்சத்திரங்கள் போல்.
வானத்தில் மின்னி நமக்கு திசையை காட்டுகின்றன.
நட்சத்திரங்களை தொடர்ந்து செல்லும் போது
நாம் கீழே பார்த்து நடக்க வேண்டும்.
நாம் தரையின் மீது நடக்கிறோம் என்ற
உண்மையையும், நிதானத்தில் வைத்துக் கொள்ள
வேண்டியதாய் இருக்கிறது."

எதற்கும் ஒரு வரம்பு, ஒரு எல்லைக்கோடு இருக்க வேண்டும் என்பார்கள். நம் வாழ்க்கைக்கும் அப்படித்தான் எல்லாவற்றிலும் ஓர் எல்லைக்கோடு நமக்காக காத்திருக்கிறது.

உலக நடப்புகளும் சொல்லுகின்ற அடிப்படை உண்மைகளை, அனுபவங்களை புறக்கணிக்கவோ, ஜீரணிக்கவோ முடியாமல் இருக்கிறது. சகிப்பு தன்மையும், இயலாமையும், நொந்த மனமுமாய் பலநேரங்களில் என்ன வாழ்க்கைடா இது? என்னும் புலம்பல்கள்.

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்களாம்....

ஒருவர் கனவுலகில் பறக்கும் லட்சியவாதிகள். அடுத்தவர்கள் மண்ணில் கால்பதிய நின்று எதையும் உலக நடப்புக் கண்ணோட்டத்தோடு செயலாற்றும் லட்சியவாதிகள் என்பார்கள்.

´Practical Persons´- இரண்டு வகையினரும் நாட்டுக்கு தேவைதான். இருப்பினும் செயல்பாடுகள் மட்டுமே அசாத்திய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்துகிறது.

ரோமானிய சக்கரவர்த்தி ´மார்க்கஸ் அரேலியஸ்´ [marcus aurelius] பற்றி வரலாறுகளில் பார்க்கிறோம்.

தத்துவஞானமும், நடைமுறை ஞானமும் இணைந்து செயலாற்றிய லட்சிய மனிதன் அவன். நம் இந்தியாவில் கூட பல தீர்க்கதரசிகள் என்பவர்கள் இருந்திருக்கிறார்கள். பல தத்துவங்கள், ஞானங்கள், ஆயிரம் ஆயிரம் தத்துவ விளக்கங்கள் எல்லாமும்தான் கிடக்கின்றன. அதனால் சமூகத்திற்கு எந்த புண்ணியமாவது இருக்கிறதா?

´மனிதப் பண்புகள்´ என்று நியதி இருக்கிறது. இன்று வரையிலும் நம் சமூகம் அதைப்பற்றி யோசித்தது கூட கிடையாது. ஏன்? தீர்க்கதரிசிகளின் தத்துவங்கள் சமயத்தோடு பின்னிபிணைந்து குலாவி கொண்டிருப்பதா நம் அசட்டைக்கு காரணம்? எப்படி மனிதன் வாழக்கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உலக மக்களுக்கு முன்பு நமது கலாச்சாரம் தான் இளித்துக் கொண்டு நிற்கிறது.

மனிதர்களை வர்ணாசிரம அடிப்படையில் பிரித்து வைத்து தர்மம் என்கிறான். அந்த தர்மங்களைத்தான் நாம் சாகும் வரையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். உலக மக்களின் சிந்தனைகளோடு யதார்த்தங்களை நோக்கி போகாமல் நமக்குள் சேஷ்ட்டைகளை செய்துக் கொண்டிருக்கிறோம். இதுவும் மனிதப்பண்புகளை ஒழித்த கனவு நிலைதான்.

சில தினங்களுக்கு முன்பு ´ஸ்லோகங்கள் நாசமாய் போகட்டும்´ பதிவைப் படித்த ஒருவர் மானவாரியாக கேள்வி கேட்டு மெயில் போட்டிருந்தார். விவாதிக்கலாம்; அருமையான சப்ஜெட்தான். முகம் தெரியாத ஒருவர். எங்கோ ஒளிந்துக் கொண்டு மனுதர்மத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்திய எல்லை வரைத்தான் அது மனுதர்மம். அதற்கு அப்பால் காட்டுமிராண்டித்தனம் என்னும் யதார்த்தங்கள் அதற்குள் இருப்பதை மனிதநேயம் மிக்கவர்களுக்கு தெரியாததா?

நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் எவை? அதை எதனால் நம்மால் தீர்க்க முடிவதில்லை. நம்மால் ஏன் தீர்மாணிக்க முடிவதில்லை? நம்மால் ஏன் அதை அலட்சியப்படுத்திச் செல்ல முடிவதில்லை? நம் இயலாமையும் அறியாமையும் அணுசரித்து போகும் மனோபாவமும் தானே! அதன் மாற்றுக்கோணத்தை நாம் பார்க்க விரும்பாததால் தானே?

கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என கணத்த இரும்பு சங்கிலிகள் பூட்டப்பட்ட உடலோடு ஆயுள் முழுவதும் பாரத்தை இழுத்து இழுத்து ஹீரோக்கள் ரோபோக்களை போல் வலம் வருகிறார்கள். இவர்கள் தான் நாளைய ரோபோக்கள்.

ரோமனிய சக்கரவர்த்தி மார்க்கஸ் அரேலியஸ் அலட்சிய சிரிப்போடு சொல்கிறார்: "எனக்கு அந்நாளைய வெத்துவாதங்கள் தேவையில்லை. நான் ஒரு பறவை போல, நீ இப்படித்தான் இது போல்தான் இப்படியாகத்தான் நடக்க வேண்டும் என்று போதிக்கத் தேவையில்லை. நான் மனிதனாக இருந்தாலே போதும்."

- தமிழச்சி
14/04/2009

 

´சே´வுக்கு செவ்வணக்கம்

இன்று அக்டோபர் 09 

பகல் 11.00 மணிக்கு தானே சுட்டுக் கொல்லும்படி அமெரிக்கா சி.ஜ.ஏ முடிவு செய்திருந்தது. 

´மரியோ ஜேமி´ என்ற பொலிவிய இராணுவ வீரனை தேர்ந்தெடுத்து கொலை செய்யும்படி கட்டளை இட்டது...

இதோ அழுக்கான ஆடையும், கைகள் கட்டப்பட்ட நிலையில் ´மரியோ 
ஜேமி´ முன் அக்கைதி நிறுத்தப்படுகிறான். 

´மரியோ ஜேமி´ அக்கைதியைப் பார்த்து, "மண்டியிடு, உன்னை சுட்டுக் கொல்ல வேண்டும்" என்றான்.

"முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்" என்று அடிக்கடி உச்சரித்தவனை பார்த்து மண்டியிடு என்கிறான் ஆணவமான மரியோ ஜேமி. 

அப்போது நேரம் சரியாக பகல் 1.10.

கைதி கூறுகிறான்: 

"எனது தோழன் பிடலிடம் சொல். எனது மரணத்தால் புரட்சியை ஒருக்காலும் ஒடுக்கிவிட முடியாது என்று. அவரைத் தொடர்ந்து போராடச் சொல்..."

"என் மனைவி ஹில்டாவிடம் மறுமணம் செய்து கொள்ளச் சொல்..."

´மரியோ ஜேமி´ அலட்சியமாய் துப்பாக்கியை தூக்கி பிடித்து குறி பார்க்கிறான். 

"உனது குறி சரியாக இல்லை நேராக எனது நெற்றியைக் குறி பார்.” நிதானமாய் தெளிவாய் பேசுகிறான் கைதி...

´மரியோ ஜேமி´ நிறைய குடித்திருத்திருந்தான். தான் செய்யப்போகும் பாதகச் செயலை நிதானத்தில் செய்ய விரும்பவில்லை போலும்... போதைக்குள் ஒளிந்து கொண்டு கோழை போல் நிற்கிறான் ஆயுதம் இருந்தும்...

நேரம் பகல் 1.10

துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் சீறிக்கொண்டு கைதியின் உடலில் பாய்ந்தன.

"கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’  

ஆவேசமாய் சொன்னான் கைதி.

அவன்தான் ´சே குவேரா´...

ஆம், 1967-இல் அக்டோபர் 9- அன்று நடந்த நிகழ்வு. 

இன்று ´சே குவேரா´வின் 43-வது நினைவு தினம். வரலாற்று நிகழ்வை அசைபோடும் நெஞ்சம் துடிக்கிறது ´சே குவேரா´வை நினைத்து.... 

அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபா புரட்சியில் பங்கேற்று, காங்கோ காடுகளில் வாழ்ந்து பொலிவியா புரட்சியில் நுழைந்து மனித நேயத்திற்கு எல்லைக்கோடு நிர்ணயிக்காமல், "கால்கள் தான் என் உலகம்" என்று உலக மக்களுக்காக அநீதி கண்ட இடமெல்லாம் கொதித்தெழுந்த நம் ´சே குவேரா´ மரித்தான் என்கிறார்கள்...  

யார் சொன்னது ´சே குவேரா´ மரித்தான் என்று? 

"ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப்படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை.." 

இப்படி சொன்னதும் நம் ´சே குவேரா´தான். 

இன்று எழுச்சின் அடையாளமாய் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் ´சே´வின் அடையாளத்தை தானே இன்றைய போராளிகள் சுமக்கின்றனர்... 

போராளிகள் ´சே´வின் நினைவு தினத்தில் தோழனுக்கு சொல்வோம்... 

செவ்வணக்கம். 

தமிழச்சி
09.10.2010

தொடர்புடைய இணைப்புகள்: 

* ´சே குவேரா´வின் புகைப்படங்கள் : 
http://www.facebook.com/tamizachi.writer#!/album.php?aid=193196&id=134355511330

* ´சே குவேரா´ - படுகொலை செய்யப்பட்ட படங்கள் : 
http://www.facebook.com/tamizachi.writer#!/album.php?aid=235611&id=134355511330&page=2 

 

ஒரு தத்துவ வரலாறு தொடக்கத்தில்...

செய்யவிடாமல் தடுத்து வைக்கிறது. ஆக மூடநம்பிக்கையும், மதமும் இக்காரணங்களுக்காக மக்களிடம் கொண்டுவரப்பட்டது."

இப்படிப்பட்ட சமூகத்தில் பகுத்தறிவு கொண்ட மனிதர்களை உருவாக்கிவிட முடியாது. 

அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக மனிதர்களுக்கு அருவருப்புக் கொடுக்கக்கூடிய முட்டாள்தனமான முறையில் பகுத்தறிவு சிந்தனைக்கு கொண்டு போகாமல் தந்திரமாக அடக்கி விடுகிறது.

எகிப்திய மக்களிடம் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கி.மு 4-ஆம் நூற்றாண்டில் சில கிரேக்கர் குழு தங்கள் சமூகத்திற்கும் செயல்படுத்தி மக்களை சுதந்திர உணர்வோடு இருக்க விடாமல் கட்டுக்குள் வைத்திருக்க நினைத்தனர். ஆனால், கிரேக்க சமூகத்தில் அத்திட்டங்களை செயல்படுத்துவது கடினமாக இருந்தது. 

காரணம்: 

கிரேக்க மக்கள் வானவியல், வடிவியல், அளவியல், மருத்துவம் போன்ற ஆராய்ச்சித் துறையில் அறிவுத் தேடலில் இருந்தனர். அம்மக்களை தங்கள் கட்டிற்குள் வைத்திருக்க ´எகிப்திய அரசு திட்டங்கள்´ கிரேக்க வர்த்தக பிரபுக்களுக்கு தேவைப்பட்டதற்கு காரணம் விளங்கியதா? 

அறிவுத்தேடலில் உள்ள சமூகம் எந்த மூடப்பழக்கங்களுக்கும், பழைமைக்கும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. 

இன்னும் சொல்லப்போனால் அப்போதே கிரேக்க தத்துவஞானியான ´தாலே´ (Thales) "பழைய புராணக் கதைகளை விட்டு வெளியே வாருங்கள்" என்று கூறிய சிந்தனைவாதியாக இருந்தார். 

´தாலே´ தத்துவஞானியே ஜரோப்பிய தத்துவத்தில் புராணக் கதைகளை அலட்சியப்படுத்திய முதல் தத்துவவாதியாகவும் இருந்தார்.

அப்படிப்பட்ட கிரேக்க சமூகத்தில் எப்படி எகிப்திய சட்டதிட்டங்களை செயல்படுத்த முடியும்? 

அதற்கான சந்தர்ப்பங்களுக்காக ´கிரேக்க வர்த்த பிரபுக்கள்´ காத்திருந்தனர். 

கி.மு 6-ஆம்நூற்றாண்டுகளிலும் கிரேக்கில் அரசியல் அதிகாரம் வர்த்தக பிரபுக்களிடம் இருந்தன. வர்த்தகத்தில் தங்கள் வளமையை அதிகரிக்க தொழில் நுட்ப வளர்ச்சிகள் அவர்களுக்கு தேவைப்பட்டன.

வரலாற்றுச் சிறப்புமிக்க ´மிலெடஸ்´ [Miletus] நகரத்தில் [கிரேக்கில் உள்ளது] இயல்பில் தத்துவம் உருவானதாக சொல்லப்படும் காலகட்டத்தில் கிரேக்க சமுகத்தில் நல்ல வளர்ச்சி இருந்ததாகவும் ஞானிகள் அதிகமாகவும் புதிய சிந்தனைகள், தத்துவங்கள், விவாதங்கள் நடந்ததாகவும் அதற்கு வர்த்தக பிரபுக்களிடம் நல்ல ஆதரவும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. 

கிரேக்க தத்துவஞானியான ´பிளேட்டோ´ நான்கு புறங்களிலும் அறிவைத் தேடி விருத்தியடைந்த போதும் கடைசியில் மாயைக்குள் திரும்பியதை இன்றை தத்துவ ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

அதேப்போல், அரிஸ்டாட்டில் "உண்மை விஞ்ஞானத்திற்கு உற்பத்தியுடன் எந்தத் தொடர்பும் இல்லை" என்று ´Republic´ என்ற நூல்லில் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. 

´மாயையை உண்டாக்குவதும் விஞ்ஞானம் தான்´ என்ற அரிஸ்டாட்டில் வாக்கியத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டது கிரேக்க அரசு ஆதரவு குழுக்கள். 

கிரேக்க மக்களை ´மாயை´ ஆராய்ச்சிக்குள் திருப்பிவிட்டது. 

கிரேக்க ஞானிகளுக்கு மாயை குறித்த ஆய்வுகளை செய்யத் தூண்டியது. அதற்காக சலுகைகள் கொடுக்கப்பட்டன. மாயை தேடுதலுக்கு முக்கியத்துவத்தை கொடுக்க வைத்தது. 

இதன் மூலம் கிரேக்க மக்கள் அறிவுத் தேடலில் இருந்து விலகிச் செல்ல வழிவகுத்தது என்கிறார் ஃபாரிங்டன்.

இந்த திசைமாற்றும் திட்டம் எல்லா சமூகங்களில் உருவாக முதல் காரணமாகவும் இருந்தது. 

சரி, இந்திய தத்துவங்களை பற்றி என்ன சொல்கிறார் ஃபாரிங்டன்? 

"இந்திய தத்துவார்த்த சிந்தனையாளர்கள் மூடநம்பிக்கைகளை நிராகரித்து அறிவுக்குப் பொருத்தமான தேடலை நோக்கி செல்லவில்லை" 

என்கிறார் தத்துவ ஆராய்ச்சியாளரான ஃபாரிங்டன்.

உண்மையா? இல்லையா? என்பதை வாசகர் சிந்தனை தீர்மானிக்கட்டும். 


தமிழச்சி 
02.06.2010

 

வாழ்க்கை மகத்தானது!

"மனிதனிடம் இருக்கின்ற சக்தி அவனுக்குள் ஆழ்ந்து உறைந்து கிடக்கிறது. இதுவரையில் நினைத்துப் பார்த்திருக்காத சக்தியைத் தூண்டிச் செயல்படுத்தினால் நமக்குள் புரட்சிகரமான பிரமிப்பை ஏற்படுத்தும்" என்பார் ´ஆரிசன் ஸ்வீட் மார்டன்.´ 

அதே அணுகுமுறையில் ´ராபின் எஸ்.சர்மா´வின் [Robin S.Sharma][1]சிந்தனைகள் நகர்கின்றது. 

ராபின் சர்மாவின் புத்தகங்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா? 

என்ன விளம்பர பாணியில் கேள்வி இருக்கிறதே என யோசிக்கிறீர்களா? 

சரி விடுங்கள். 

ஆனால், கண்டிப்பாக நீங்கள் ராபின் சர்மாவின் நூல்களை வாசித்துப் பார்க்க வேண்டும்.[2] 

"mega living" புத்தகத்தில் நம் வாழ்க்கையை பக்கம் பக்கமாக அலசி பார்க்க கற்றுக் கொடுக்கிறார். 

ராபின் எஸ்.சர்மா எழுத்துக்களை படிக்கும் போதே நமக்குள் ஒருவித நம்பிக்கை, உற்சாகம், குதூகுலம், தெணாவட்டு எல்லாம் வந்துவிடுகிறது. ´மந்திர சக்தி வார்த்தைகள்´ என்பார்களே அப்படியொரு எழுத்துத் திறன் ராபின் சர்மாவிடம்.[3]

என்னத்தான் நடக்கும் நடக்கட்டுமே......

சிறு துள்ளலுடன் வாழ்க்கையை பயணிக்க வைத்துவிடும் நடை. 

"சோர்வா...?" 

"மனம் சேர்வடைந்து நம் எண்ணங்களையும், தீர்மாணிக்கும் சக்திகளின் வலிமையையும் குறைத்து நம்மை குழப்பி விடுகிறதா? தாழ்வான எண்ணங்களும் பலவீனமான கருத்துக்களையும் நம்மை தாழ்த்திவிடக்கூடும். எனவே நம் சிந்தனையை ஒருமுகப்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் சோர்வாவது சோகமாவது..

"நம்பிக்கை துரோகமா..?" 

"கவலைப்படாதே, துரோகத்தின் வலிகள் நமக்குள் ஒரு பாடத்தை புகட்டுகிறது. நிகழ்ச்சிகள் வெளிச்சம் போட்டுக்காட்டவே நடைப்பெற்றிருக்கினறன என்பதை உணர்ந்து கொள்"

தத்துப்பித்தென்று இல்லாது தத்துவம் தத்துவமாக எடுத்துவிடுகிறார் ராபின் சர்மா. அத்தனையும் சுயசிந்தனை சுயமுன்னேற்ற நூல்கள். உருப்படியாய் நாம் படிக்க வேண்டும் என்றால் சிறுநாவல்களையும், கவிதைகளையும் குப்பைக்கு அனுப்பி விட்டு சுயமுன்னேற்ற நூல்களை அதிகம் வாசித்து பழகவேண்டும். 

அறிவுதான் சக்தி வாய்ந்தது. அதை தூண்டிவிட்டு பகுத்தறிவினால் சிந்திக்க ஆரம்பித்தால் போதும். திடமான மனோதிடமும் உற்சாகமும் நமக்குள் உருவாகிவிடும். 

வாழ்க்கை மகத்தானது. 

அதை எப்படி வாழ்ந்துச் செல்கிறோம் என்பது மிகமுக்கியமானது. 

நம் மகத்தான வாழ்க்கையின் திட்டம் என்ன? அப்படியும் ஏதாவது திட்டம் நமக்கிருக்கிறதா என்ன? அப்படி ஏதாவது இருந்தால் அத்திட்டத்தை எப்படி நெறிபடுத்தி செயல்படுத்த போகிறோம்? அதற்கான திறமையும் யோக்கியதையும் நமக்கிருக்கிறதா? 

இருக்கு, இல்லை அல்லது கொஞ்சம் கொஞ்சம் என முழிக்கிறீர்களா? 

சரி விடுங்கள்... :-))

வேண்டாம் கவலை. புதியதாக உருப்படியான திட்டங்களை போடுவோம். அதற்கான அபாரமான செயல் திட்டங்களை நமக்கு பகிர்ந்தளிக்கிறார் ராபின் எஸ்.சர்மா. வாசித்து செயல்படுத்துவதே நமக்கான வேலை. 

அதற்கான தில் வேண்டுமே! என்ன செய்வது? 

முதலில் நம் வாழ்க்கையின் மேன்பாட்டுக்கு கட்டுப்பாடு தேவை என்கிறார். நம் அடிப்படை பழக்க வழக்கங்களே செயல்களாகி விடும் போது, நம் பழக்க வழக்கங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்னும் ராபில் எந்தத் துறையிலும் வெற்றி பெற வேண்டுமானால் மனக்கூர்மையும் தொடர்ந்த செயல்பாடுகளும், கட்டுப்பாடுகளும் இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது என்பதுடன் மனோதிடத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளையும் சொல்கிறார். 

மனத்தளர்ச்சி நம்மிடம் அதிகம் தேங்கி இருக்கிறது என்னும் ராபில் இதை ´வியாதி´ என்றே குறிப்பிடுகிறார். 

இதை எப்படி துரத்தி அடிப்பது? 

அழகாக சொல்கிறார் ராபின் சர்மா:

"மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்தையும் கட்டுப்படுத்துவதே நம் மனத்தளர்ச்சியை நீக்கச் செய்யும் முதல் முயற்சியாகும். முதலில் மனச்சோர்வு ஏற்பட்டதற்கு காரணம் நாமே என்பதை உணர வேண்டும். அதன் எண்ணத்தைச் சீராக்க வேண்டும். இதற்கெல்லாம் பயிற்சிக்கு போக வேண்டும் என்றெல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் எல்லாமும் உங்களிடமே இருக்கிறது. அதை உணர்ந்து செயல்படுத்த முயலும் எண்ணத்தில் மனோதிடம் இருக்க வேண்டும்" என்கிறார். 

மற்ற சுயமுன்னேற்ற நூல்களை விட இவை முற்றிலும் மாறுபட்டே இருக்கிறது. கூடுமானவரையில் நம்மை பயிற்சிக்கு தயார் படுத்துவதிலேயே தீவிரமாக இருக்கிறார் ராபின் சர்மா.

நாம் மகத்தான வாழ்க்கையை வாழ்வதற்கு மனத்திடம், திட்டமிடல், உடல் வலிவு, மனோபலம் போன்ற திறமையான குணங்களை உருவாக்கிக் கொள்ள செய்ய வேண்டிய முக்கியத்துவங்களை அழகாக சொல்கிறார் ராபின் சர்மா.   

அட! சூப்பர் புத்தகம். நிறைய சிந்திக்க வேண்டிய சங்கதிகள் இருக்கிறது. 
வாசித்துப் பாருங்கள் 

தமிழச்சி
07.02.2010 

தொடர்புடைய இணைப்புகள்:

* Robin S.Sharma[1]
http://bit.ly/96Oiku
* ராபின் நூல்கள்[2]
http://bit.ly/cxGtWx
* ராபின் சர்மா வீடியோவில்...[3]
http://bit.ly/b25rxv
http://bit.ly/d1i5l3
* Robin S.Sharma facebook
http://www.facebook.com/Robin.Sharma.LT?v=app_4949752878

 
மேலதிகக் ஆக்கங்கள்...

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel