ஞானிகள்

"ஈஸ்டர் திருநாள்" - இயேசு உயிர்த்தெழுந்தாரா?

பயனாளர் தரப்படுத்தல்: / 5
குறைந்தஅதி சிறந்த 

24.-Good-Friday-இயேசு கி.பி 33-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இறந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கணிக்கின்றனர். வேறு சிலர் இதற்கு மாற்றாக கி.பி 34-ஆம் ஆண்டு இயேசு இறந்திருக்கக்கூடும் என்கிறார்கள். வரலாற்று குழப்பம் ஒருபுறம் இருக்க...

"மத்தேயு, மார்க், லூக்கா, யோவான்" என்னும் நால்வரும் இயேசுவின் வரலாற்றையும், போதனைகளையும் எழுதி நூல்களாக வெளியிடுகிறார்கள். இதில் ´யோவான்´ இயேசுவின் வாழ்க்கையில் இறுதியில் நடந்த நிகழ்வுகளை விரிவாக எழுதி இருக்கிறார்.

இந்நூல்கள் கிபி 65-முதல் 110-க்குள் உட்பட்ட காலகட்டங்களில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இந்நால்வர் எழுதிய நூல்களிலும் பல்வேறு தகவல்களில் குழப்பங்களும், மாற்று கருத்துக்களும் இருந்திருக்கின்றன. இருப்பினும் கத்தோலிக்க சபை, ஆங்கிலிக்க சபை, லூத்தரன் சபை, மரபுவழா சபை உட்பட முக்கியத்துவமான அங்கத்தவர்களால் அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் சிறப்பு பெற்றன.

இந்நூல்களை முன்வைத்து பின்னாளில் அறிஞர்கள் பல ஆய்வுகளும் பல திருத்தங்களும் செய்ததையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இனி, இயேசு கடவுளாக ஏற்றுக் கொண்ட வரலாற்றுக்கு செல்வோம்.

உலக வரலாற்றில் எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பாரசீக கிரேக்க அரசுக்களின் ஆட்சிக்குப் பின் ரோம் அரசு கி.மு 168 முதல் கி.பி 476 வரையில் ஆட்சி செய்தது. ரோம் ஆட்சியில் கி.பி 34-இல் (அல்லது கி.பி 33-இல்) இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர் பெற்றார் என்று இயேசுவின் சீடர்களையும் அதை நம்பிய மக்களையும் ரோம் அரசு கொடுமைப்படுத்தியது.

பலருக்கு மரண தண்டனை கொடுத்தது. கிட்டத்தட்ட 300-ஆண்டுகள் இயேசு கடவுளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கி.பி 306-இல் ரோம் மன்னன் ´கான்ஸ்டன்டைன்´ ஸ்பெயின் நாட்டின் மீது போருக்கு செல்லும் இடத்தில் சிலுவையை கண்டார். ´வெற்றி பெறுவாய்´ என்று அருள்வாக்கும் கிடைத்தது. போரில் வெற்றி பெறும் நம்பிக்கையை இழந்திருந்த கான்ஸ்டன்டைனுக்கு பெரும் வெற்றி கிடைத்தது.

தனது நாட்டுக்கு திரும்பிய பின் சிலுவை குறித்து ஆராய்ச்சிகள் செய்யும்படி அறிஞர்களிடம் கோரினார். மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் எழுதிய நூல்களில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இயேசு உயிர்த்தெழுந்த வரலாறுகள் வரை ரோம் மன்னன் கான்ஸ்டன்டைனுக்கு போதிக்கப்பட்டது.

கி.பி 313-இல் ரோம் நாட்டு மன்னன் ´கான்ஸ்டன்டைன்´ இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொண்டார். இயேசு கடவுளின் அவதாரம் என்று அறிவித்தார். மக்களையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி பரப்புரை செய்தார்.

´இயேசு பிறப்பதற்கு முன்´, ´இயேசு பிறப்பிற்கு பின்´ என்று வரலாறுகளை கணிக்கும்படியும் ஆணையிட்டார். ´கி.மு - கி.பி´ வரலாற்று கணக்கிடுகள் இன்றைய காலம் வரையில் இப்படியே கணிக்கப்படுகின்றது. அதேப்போல் ´சிலுவை குறி´ புனிமாகவும், கிறிஸ்துவ மதத்தின் சின்னமாகவும் இருக்கிறது.

´கான்ஸ்டன்டைன்´ காலத்திற்கு பிறகும் ரோம் மற்றும் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இயேசுவின் வரலாறுகளும், போதனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீவிரம் அடைந்தன.

கி.பி 391-இல் பண்டைக்கால நாகரிகத்தின் சின்னங்களான ´சிரபிஸ்´ (Serapis) கோயில்கள் அனைத்தும் கிறிஸ்துவ மதகுருமார்கள் பாதிரியார்களால் அழிக்கப்பட்டன.

கி.பி 590- 604 இல் ரோம் போப்பாண்டவராக இருந்த ´கிரிகோரி1´ கொடுங்கோலனாக இருந்தார். கடவுள் மறுப்பாளர்கள் விஞ்ஞானிகள் உட்பட பலரை கொடூரமாய் தண்டித்தார். அறிவியல் நூல்களை முற்றாக அழிக்கும்படி கட்டளையிட்டார்.

17-ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க கொள்கைகளை எதிர்ப்போர்களைத் தண்டிக்க ரோம் போப்பாண்டவர் சமயத்துறை சார்ந்த உயர்மன்றம் ஓன்றை ஏற்படுத்தினார். இந்த உயர் மன்றத்தின் மூலமாகத்தான் தத்துவஞானியும், விஞ்ஞானியுமான ´புருனோ´ (Bruno) வுக்கு, ´வான நூலை´ எழுதியதற்காக உயிரோடு கொளுத்தி கொல்லும்படி கட்டளை இட்டு நிறைவேற்றப்பட்டது.

´கலிலியோ´வின் (Galileo) பூமி உருண்டை என்னும் கருத்தை வாபஸ் வாங்கும்படி சமயம் மிரட்டியது.

17-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானத்திற்கும், சமயத்திற்கும் பெரும் போராட்டமே நடந்தது.

´மனிதனில் இருந்து மனிதன் தான் தோன்ற முடியும்´ என்ற பைபிளின் வாதத்தை ´டார்வின்´ கூற்று மறுத்தது. ´மனிதன் குரங்கில் இருந்து வந்தவன்´ என்னும் டார்வின் ஆய்வு சர்ச்சையை கிளப்பியது.

கிறிஸ்துவத மதத்திற்குள் உட்பிரிவுகள் சில ஏற்பட மதகுருக்கள் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தினர். கிறிஸ்துவமதக் கோட்பாடுகளை உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்புகளும் நடந்தன. பல்வேறு குழுக்களான இருந்த மக்களிடம் கிறிஸ்துவ மதத்தில் இணைத்துக் கொள்ளும்படி தூண்டப்பட்டனர். அல்லது கட்டாயப்படுத்தப்பட்டனர்.

கடவுள்களும், மதங்களும் ஏற்பட்ட காலங்களிலேயே கடவுள் இல்லை மதங்கள் இல்லை என்று கூறுவோர்களும் இருந்தனர். இவர்களை பொருள் முதல்வாதிகள் என்று அழைக்கப்பட்டனர். அதாவது தாங்கள் காண்பவைகளை மட்டும் ஏற்பவர்களாகவும் உலக யதார்த்தத்தோடு வாழ்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் வெளிப்படையாக கடவுள் மறுப்பு கருத்துக்களை பேச முடியவில்லை. அப்படி பேசுபவர்கள் அரசாங்கத்தினரால் கடுமையான தண்டனைக்குள்ளானார்கள்.

சில வரலாற்று ஆதாரங்களை பார்ப்போம்.

கிரேக்க பொருள் முதல்வாதியான ´அனக்ஸகோரஸ்´ (Anaxagoras) நாத்திகர் என்று ´ஏதென்ஸ்´ மாநகரில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

"உலகில் உள்ள அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை" என்ற பைபிள் வாக்கியத்திற்கு எதிராக ´டெமோக்கிரடஸ்´ (Democritus), "மனித சமுதாயத்தின் வாழ்க்கையிலும், உலகில் இருக்கும் இயற்கையின் செயல்களிலும் கடவுள் கண்காணிப்புகள் எதுவும் இல்லை" என்று கூறியதோடு, "இல்லாத கடவுளை தேடி ஆராய்ச்சி" என்ற நூலையும், "மனித வாழ்க்கையில் கடவுள் தலையிட உரிமை இல்லை" என்ற நூல் உட்பட வேறு பல நூல்களும் எழுதினார். மேலும் தனது ஆராய்ச்சியில், "பொருளின் சிறு துளி அணு என்றும், பொருட்கள் அணுக்களால் ஆனது" என்றும் தனது ஆய்வின் முடிவு குறித்து கூறிய போது கிறிஸ்தவ சமயவாதிகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. ´டெமோக்கிரடஸ்´ நூல்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன. இன்றைய சந்ததியினருக்கு ´டெமோக்கிரடஸ்´ சிந்தனைகள் எதுவும் கிடைக்காவண்ணம் முற்றாக அழிக்கப்பட்டன. ´மெமோக்கிரடஸ்´ இறப்பு குறித்தும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

´எபிக்கூரஸ்´ (Epicurus) இவர் ´டெமோக்கிரடசின்´ சீடர். "மனிதன் கடவுள் நம்பிக்கையில் இருந்து விடுபட்டு பகுத்தறிவையும், விஞ்ஞான உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும்" என்று மக்களிடம் தொடர்ச்சியாய் பிரச்சாரம் செய்தவர். இவரையும் கிறிஸ்துவ சமயம் விட்டுவைக்கவில்லை.

ஐரோப்பாவில் மதத்திற்காக நடைப்பெற்ற போர்களை "கிறிஸ்தவப் போர்" என்று அறிவித்தனர். இப்படி பல உதாரணங்கள் இருந்தாலும் ஈஸ்டர் திருநாள் தொடர்புடைய தகவல் ஒன்றை பார்ப்போம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தத்துவஞானி ´வானினி´ (Vanini) 1619-இல் பைபிளில் இருக்கும் வாசகங்களையும், இயேசுவின் வரலாறுகளையும், அதில் இருக்கும் முரண்களையும் கேள்விக்குட்படுத்தி சமயவாதிகளிடம் விவாதித்தார். ´வானினி´யின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் தடுமாறிய சமயவாதிகள், "பைபிள் கருத்தை ஆய்வுகள் இன்றி ஏற்க வேண்டும்" என்று பிற்போக்குத்தனமாய் பேசியது.

´வானினி´ தொடர்ச்சியாய் பைபிள் வாக்கியங்கள் குறித்து விமர்சனங்ளை முன்வைத்துக் கொண்டே இருந்தார்.

"இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்த பின் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்" என்னும் வாதத்தை ஏற்க மறுத்தார் வானினி.

இவ்விவாதம் பெரும் சர்ச்சையை கிளப்ப, கிறிஸ்தவ மதகுரு ´வானினி´யை உயிரோடு நெருப்பில் எரித்து கொல்லும்படி ஆணையிட்டது.

பிரான்ஸ் நாட்டில் தெற்குப் பகுதியைச் சேர்ந்த ´துளுஸ்´ நகரத்தில் முக்கிய சாலை ஒன்றில் பொது மக்களுக்கு முன்பு தண்டனை நிறைவேற்றப்படும் தருணம்.

நெருப்பில் தள்ளப்படும் முன் ´வானினி´ மதகுருவை பார்த்து கூறுகிறார்:

"உங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்த போது பிதாவே அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்கள் அறியாமையில் தான் இக்காரியத்தை செய்கிறார்கள் என்று இயேசு கூறியதை போல் நான் கூறமாட்டேன். நீங்கள் செய்யும் குற்றத்தை நீங்கள் உணர்ந்தே செய்கிறீர்கள்" என்று ஆவேசமாய் முழங்கினார்.

´வானினி´யின் வார்த்தைகளில் மேலும் கோபம் அடைந்த மதகுரு, "இவனை நெருப்பில் தள்ளும்முன் நாக்கை பிடுங்கி எறிந்துவிட்டு தள்ளுங்கள்" என்று கூறுகிறார்.

´வானினி´யை சுற்றி இருந்த கிறிஸ்தவ பாதிரிகள் வானினியின் நாக்கில் இரும்பினால் ஆன கொக்கியை சொருகி நாக்கை பிடுங்கி வெளியே எறிந்துவிட்டு வானினியை நெருப்பில் எறித்து கொன்றனர்.

"இயேசு மரணித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரா?" என்று விவாத்தித்ததற்காக வானினி படுகொலை செய்யப்பட்டார்.

ஆனால், அவர் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை பதிலே இல்லை...

இன்று 21-ஆம் நூற்றாண்டு.

2011-இல் ´ஈஸ்டர் திருநாள்´ என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மதகுருக்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை பரிமாறுகிறார்கள்.

எல்லாம் சரி...

தத்துவஞானி ´வானினி´ எழுப்பிய கேள்வியை ஒரே ஒருமுறை உங்கள் மதகுருக்களிடம் கேளுங்கள். அல்லது ´வானினி´க்கு நடந்த கொடூரத்தை நினைவுப்படுத்துங்கள்.

"மதங்கள் அன்பை மட்டுமா போதிக்கிறது?"

வன்முறைகளை செலுத்தி மக்களை முட்டாள்களாக வைத்திருக்க ´பைபிள்´ சொல்லும் கதைகளை இந்நாள் மனிதனும் கேள்விகளின்றி ஏற்க வேண்டுமா?

உங்களிடம் முன்வைத்திருக்கும் கேள்வி இதுதான்:

"ஈஸ்டர் திருநாள் - இயேசு உயிர்த்தெழுந்தாரா?"

தமிழச்சி
23.04.2011


 

உலகம் உருள்கிறது...

வாழ்வின் ´சூட்சமம்´ குறித்து பேசுகிறது லாட்சுவின் தத்துவம். சூட்சமத்தையும் எதுவுமற்றிருக்கிறதே அதுதான் ´சூட்சமம்´ என்றும் கூறிவிட்டார். இரண்டாயிரத்தி நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர் சொல்கிறார். கருணை, சிக்கனம், தலைவனாகத் தன்னை முன்னிறுத்தாமை என்னும் மூன்று குணங்களை எனக்குள் அடக்கி வைத்திருக்கிறேன் என்று. தன்னிலை விளக்கத்திற்காக காரணத்தை லாட்சுவின் உணர்வு அன்றைய சமகால நிகழ்வுகளோடு முன்வைத்து பேசுகிறது. எங்கு பார்த்தாலும்... போர்!! போர்!!! அடுத்தவனுக்கு உரியதை தன் உரிமைக்குள் கொண்டு வருதல், எல்லைக் கோடுகளை விரிவுபடுத்துதலில் வீரத்தனத்தை காட்டும் தலைமை (ராஜா) கருணையற்ற பண்பு மறத்தல், இதன் முடிவு அழிவு நோக்கிதான் என்கிறார் லாட்சு.

ராஜாவின் ஆலோசனைக் குழுவில் முதன்மையானவராக இருந்த லாட்சுவின் சமாதானக் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் தன்னுடைய முதுமைப் பருவத்தில் காட்டுக்குள் சென்று தனிமையில் வாழ்ந்தார் என்று அவரது வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அவர் எழுதிய கவிதை வரிகளின் தத்துவங்கள் லாட்சுவின் வரலாற்று நிகழ்வுகளோடு பொறுத்திப் பார்ப்பின் அர்த்தங்கள் பிடிப்படக்கூடும் என்பதற்காக மேற்காட்டப்பட்ட சிறு விளக்கம்.

இனி கவிதையில் தத்துவம் :

பார்ப்பவர்கள் சொல்கிறார்கள் -02.03.2011-dec-04
நமது பாதை பழுதுபட்டது,
கொள்கை கேலிக்குரியது என்று.
உண்மையிலேயே உயர்வானதாய்
இருப்பதனால்தான் முட்டாள்தனமானது
என்ற முரசொலி.

சாயம் போகாமல் காணாமல் போகாமல்
நிலையாக நிற்கிறதே அதுதான்
அதன் உயர்வின் சூட்சமம்.

முன்னோர்கள் பயந்த மூடக்கொள்கையாயிருந்தால்
எப்போதோ போயிருக்கும் இடம் தெரியாமல்
என்னிடம் இருப்பதோ மூன்று நகைப்பெட்டகங்கள்.

முதாவது, கருணை
இரண்டாவது, சிக்கனம்
மூன்றாவது, தலைவனாகத் தன்னை முன்னிறுத்தாமை.

இன்றைய ´வீரம்´ கருணையை அறிவதில்லை.
தாராளம் சிக்கனத்தை இழந்து நிற்கிறது.
தலைமை அடக்கத்தை மறந்து...

கருணையில்லாத துணிவு
சிக்கனமில்லாத வள்ளல் குணம்
அடக்கமற்ற தலைமைப் பண்பு
அழிவு அருகில் வருவதன் அடையாளம்.

போரில் தொடர்ந்த வெற்றிக்குக் காரணம் கருணைதான்.
தற்காத்துக் கொள்பவனைத் தாங்கி நிற்பது கருணைதான்.
கருணையே ஆயுதமாக - கடவுள் காப்பாற்றுபவராக
உலகம் உருள்கிறது.

தமிழச்சி
01.03.2011


 

புத்தரின் நல்வினை தீவினை

பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

09.01.2011-bou-


கங்கை ஆறு குறித்து சுருக்கமாய் சொல்ல வேண்டுமானால் ஒரு வரியில் இந்துக்களின் புனித நதி என்று கூறிவிடலாம். அதையும் தாண்டி பழம்பெரும் நதியான கங்கை குறித்து புராணக்கதைகள் உட்பட பல வரலாறுகளையும் கொண்டிருக்கிறது. தற்போதைய ´மஹேந்த்ர காட்´ கங்கை கரையின் துறைமுகத்தில் கப்பல்கள் செல்வதற்காக உருவாக்கப்பட்ட இடத்தில் அந்நாளில் கங்கை கரையை கடப்பதற்காக ´புணை´ என்கின்ற கட்டு மரம் மூலமாக மக்கள் சென்றதாக கூறப்படுகிறது. புத்தரும் ´புணை´ கட்டு மரம் மூலமாக அப்பக்கத்தில் பலமுறை கங்கை கரையை கடந்தார் என்று பௌத்த வரலாற்று நூல்களில் காணப்படுகிறது. இறுதியாக புத்தர் பாடலிபுரத்திற்கு வந்துவிட்டு கங்கை கரையை கடந்து சென்ற வரலாறு குறித்து பௌத்த நூல் ஓர் நிகழ்வு கூறுகிறது:

பாடலிபுரத்திற்கு புத்தர் வருகிறார் என்று தகவல் தெரிந்ததும் செல்வந்தர்கள் புதியதாக ஓர் மண்டபம் கட்டி உபசரித்ததாக கூறுகிறது. புத்தர் அம்மண்டபத்தில் தங்கி இருந்த காலங்களில் பொது மக்களுக்கு உபதேசம் செய்யும்படி புத்தரின் சிஷ்யர் ஆனந்தர் கேட்டுக் கொண்டதாகவும் அதன்படி புத்தர் உபதேசம் செய்ததாகவும் பௌத்த குறிப்புகள் கூறுகின்றன. குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ´நல்வினை´ ´தீவினை´ குறித்து புத்தர் கூறுகிறார்:

´தீவினை´ செய்தவர்களுக்கு ஐந்து வகையான துன்பம் வருகிறது. முதலில் தீயச்செயலைச் செய்த ஒருவன் முதலில் செல்வத்தை இழந்து வறுமை நிலையை அடைகிறான்.

இரண்டாவதாக அத்தீயச் செயல் ஊரெல்லாம் பேசப்பட்டு அவன் மேலும் துன்பம் அடைகிறான்.

மூன்றாவதாக அவன் போகும் இடமெல்லாம் அவனை புறக்கணிப்பதைக் கண்டு அவன் உள்ளம் மேலும் குழப்பம் அடைகிறது.

நான்காவதாக அவன் இறக்கும்போது இனி என்ன நடக்குமோ என்று அவஸ்தைப்படுகின்றான்.

முடிவில் அவன் உடல் அழிந்த பின்னும் துன்பத்திலேயே இருக்கின்றான்.ஆனால் ´நல்வினை´ செய்தவன் ஒருவன் ஐந்து வகையான நன்மையைப் பெறுகின்றான். அவன் தொழிலில் லாபம் கிடைக்கிறது. அவன் பெயர் நன்றாகப் பேசப்படுகின்றது. எந்த இடத்திற்கு சென்றாலும் நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது. இறக்கும் போது அமைதியாக இறக்கிறான். இறந்த பின்னரும் அவன் சித்தம் அல்லற்படாமல் இன்பமாக இருக்கிறது. புத்தரின் இந்த உபதேசத்திற்கு பிறகு தனது பயணத்தை தொடங்கி கங்கை கரையை கடந்ததாகவும் காணப்படுகின்றது.

"மனிதனின் செயல்..
செயல் சார்ந்த நிகழ்வுகள்...
நிகழ்வு சார்ந்த உணர்வுகள்...
உணர்வு சார்ந்த விளைவுகள்..."

என அந்நாளில் புத்தியின் தெளிவில் புத்தர் கூறிய உபதேசம் இன்று மனவியல் வல்லுனர்கள் கூறும் கருத்துக்கு ஈடானதாகும் புத்தர் தான் வாழ்ந்த சமுதாயத்தை மிக ஆழ்ந்து நோக்கி தனது வாழ்வியல் சிந்தனைகளை சமூகமேன்பாட்டுக்காக முன்வைத்திருப்பதை பாருங்கள்...

தமிழச்சி
06.01.2011

 

சித்தனைத் தேடி பித்தனாகி போவேனோ?

பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

3480267சில நாட்களுக்கு முன்பு மருந்துக்கடைக்குச் சென்றிருந்தேன். நிறைய ஒமியோபதி மருந்துக்களை பார்க்க முடிந்தது. உடல் மெலிவதற்கு கூட ஒமியோபதியில் மருந்துக்கள் வந்துவிட்டன. சமீபத்தில் புளியில் (சமையலுக்கு உபயோகிப்பது) ஏதோ மருத்துவ மகிமை இருப்பதை கண்டுபிடித்து இந்தியாவில் இருந்து வாரிக் கொண்டு வருகிறது ஐரோப்பிய மருத்துவ உலகம். கடந்த 5-வருடங்களாகவே ஐரோப்பாவில் ஒமியோபதி மருத்துவத்திற்கு அமோக ஆதரவு வந்துக் கொண்டிருக்கின்றது. அடுத்தது சீன நாட்டு அக்குபஞ்சருக்கும் கிராக்கி.

எனக்கு தெரிந்த ஒருவர் அலர்ஜிக் உள்ளவர். அடிக்கடி தும்பிக் கொண்டே இருப்பார். கொஞ்சம் தூசி இருந்தால் கூட போதும். ஒரே தும்பல் தான். சிறிய வயதில் இருந்தே அவர் அலர்ஜிக்காக மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அக்குபஞ்சர் மூலம் ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சுத்தமாக தும்பல் வருவது நின்று போய்விட்டதாக சொல்கிறார்.

எனக்கும் நெடுநாட்களாகவே சித்தர்களைப் பற்றியும் அவர்களுடைய மருத்துவ கண்டுப்பிடிப்புகளைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள விரும்பி தமிழில் புத்தகங்களை தேடிப்பார்த்தேன். ம்கூம்.... ஒன்று கூட கிடைக்கவில்லை.

கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆதியில் பகவான் அவதாரமாகிய ´தன்வந்தரி´ மருத்துவ இயலை முதல் முதலாக உருவாக்கியதாக ´ஐதீகம்´ சொல்கிறது. ´தன்வந்தரி´ என்ற பெயரில் பல மருத்துவ இயலைத் தோற்றுவித்தவர்கள் இருப்பதால் வரலாற்று குழப்பம் ஏற்படுகிறது. இருப்பினும் ´காசிராஜ திவோதாச தன்வந்தரி´ (Kasiraja Divodasa Dhenvantari) ஆயுர் வேதத்தை முறைப்படுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரித்திருக்கிறார். உட்கொள்ளும் மருந்து, குழந்தை மருத்துவம், மனத்தத்துவ இயல், தொண்டை, காது, மூக்கு மற்றும் கண் சிகிச்சை, அறுவை மருத்துவம், நச்சுப் பொருள், இரசாயண இயல், காயகல்ப இயல் (geriatrics) உடலுறுப்புக்களைத் திருத்தியமைக்கும் அறுவை சிகிச்சை என மருத்துவப்பிரிவுகளைக் கண்டு ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் ஆச்சரியத்துடன் புகழ்கின்றனர்.

சித்த மருத்துவம் தமிழகத்தில் தோன்றிய மருத்துவ சாத்திரம். அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் வகுத்தமுறைகள். பெரும்பாலும் மூலிகைகளை கொண்ட மருத்துவமுறைகள்.  ஐரோப்பிய மருத்துவ முறைகள் நம்நாட்டில் வழக்கத்திற்கு வந்தபின் சித்த மருத்துவம் சிதிலடைந்துவிட்டது.

சமீப காலமாக இந்திய அரசு ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் வட இந்திய ´யூனானி´ மருத்துவம் மறையாமல் இருப்பதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பலகோடி செலவில் கல்லூரிகளும், ஆய்வு நிறுவனங்களும், மூலிகைத் தோட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு சித்த மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவில் சித்த மருத்துவத்திற்கு மதிப்பு கூடிக்கொண்டு போவதும் இந்திய அரசு கவனத்தில் எடுத்திருக்கலாம். நம் முன்னோர்களின் அறிவை அதன் உருவாக்கங்கள் நம் மண்ணில் முற்றிலும் இன்னும் மறையவில்லை என்பதற்கு சில உதாரணங்களாக அரசு சித்த மருத்துவங்கள் இருக்கின்றன.

கி.மு.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் சரகர் (Charaka) இந்திய மருத்துவ உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் "சரகஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார்.120- அத்தியாயங்கள் கொண்ட சரகஸம்ஹியில் மருத்துவக் கோட்பாடுகள், நோய் பரிசீலனை, உடல் அமைப்பு, உடலுறுப்பு இயக்கம், கருவின் தோற்றம் மற்றும் கருவின் வளர்ச்சி, வியாதி குறித்த சிகிச்சை அணுகுமுறைகள் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனுக்கு வியாதிகள் எப்படி தோன்றுகின்றது என்பதைக் குறித்து அவரின் ஆராய்ச்சியின் முடிவில், "வியாதிகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் வருகின்றது" என்பதை சாகர் தான் முதல் முதலாக உலகுக்கு சொன்னவர். பிரெஞ்ச் விஞ்ஞானி ´லூயி பாஸ்டி´யருக்கு முன்னாலேயே அதாவது 2.500-ஆண்டுகளுக்கு முன்பே சரகருக்கு தெரிந்திருக்கிறது. சரகர் மனிதனின் உடல் இயக்கம் பற்றி சொல்லும் போது மனிதனின் உடல் முழுவதும் இரத்தத்தில் இருப்பதில்லை. மனித உடல் முழுவதும் இருக்கும் இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டேயிருக்கிறது என்றார்.

17-ஆம் நூற்றாண்டில் ´வில்லியம் ஹார்வி´ என்னும் ஆங்கிலேய விஞ்ஞானி இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் என்று ஐரோப்பிய விஞ்ஞானம் சொல்கிறது. சரகருக்கு பிறகு கி.மு.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சுஸ்ருதர் "சுஸ்ருத ஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார். "சுஸ்ருத ஸம்ஹிதை" இந்திய அரசு பதிப்புத்துறை Scientiste என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் வெளியிட்டிருக்கிறது. சுஸ்ருதர் அறுவை மருத்துவ சிகிச்சையில் நிபுணராக இருந்திருக்கிறார். Scientiste நூலில் ஓரிடத்தில் சுஸ்ருதர் சொல்கிறார்:

"அறுவை மருத்துவனுக்கு தைரியமும், சமயோசித சாமர்த்தியமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அறுவை மருத்துவன் கைகள் வியர்க்கக் கூடாது. கூரிய கத்தி முதலிய மருத்துவ ஆயுதங்களை கை நடுங்காமல் கெட்டியாக பிடித்திருக்க வேண்டும். அவனை நம்பி ஒப்படைத்திருக்கும் உயிரை சொந்த மகளை(னை)ப் போன்று கருதவேண்டும்.

"நெருக்கடி நேரங்களில் அறுவை மருத்துவன் சுபவேளை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. விபத்து அல்லது ஆபத்தான சுழலில் சிக்குண்டு கொண்டுவரப்படும் நோயாளியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற சிந்தனை வரவே கூடாது. எப்படியாவது உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்ற தீவிர செயல் இருக்க வேண்டும்." என்கிறார் சுஸ்தர்.

இன்றைய மருத்துவ உலகம் கடைப்பிடிக்கும் மருத்துவ நெறியை10-ஆம் நூற்றாண்டிலேயே சுஸ்தர் சொல்லிவிட்டார். இப்படி அரிய கண்டுப்பிடிப்புகளை எடுத்தச் சொன்ன சித்தர்களைப்பற்றி தமிழில் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாரும் சீண்டிப்பார்க்காத கண்டுபிடிப்புகளாக போய்விட்டது.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ´பாஸ்கரர்´ என்ற வான இயல் ஆராய்ச்சியாளர் இருந்ததாகவும், "ஜியோதிஷம்" என்று வான சாஸ்திரத்தை தொகுத்ததாகவும் கேள்விப்பட்டு அதையும் தேடிப்பார்த்தால் நஹி... என்ற பதிலும், கேலியுமாகவே பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற எங்களுக்கே அவரை யாரென்று தெரியவில்லை. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று சொல்கிறீர்கள். பேரைப்பார்த்தால் பாஸ்கரர் என்று இந்த காலத்து பேராக இருக்கின்றது. நீங்கள் தப்பாக புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அட்வைஸ் வேறு.

எப்படியாவது இந்த வான இயல் பாஸ்கரனை கண்டுப்பிடித்தே ஆக வேண்டும் என்று தேடிதேடிப் பார்த்தேன். இணையத்தில் கூட அவரைப்பற்றி எந்தக் குறிப்பையும் காணவில்லை. வெறுத்துப் போய் நாளடைவில் அதைப்பற்றி மறந்து போய்விட்ட நிலையில் சென்ற மாதத்தில் பாரதியார் கவிதைகள் தொகுப்பு அடங்கிய கவிதைகளை படித்துக் கொண்டிருந்த போது....

"உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்" - என்று பாரதியார் ஓர் பாடலில் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரரின் வான சாஸ்திரத்தை வியர்ந்து போற்றுவதைக் கண்ட பிறகு மீண்டும் பாஸ்கரன் ஆராய்ச்சி தொற்றிக் கொண்டது.

வராகமிகிரரின் "பிருகத்சம்ஹிதை" என்னும் சாஸ்திரம் 4000-சுலோகங்கள் மூலமாக அறிவியல் துறைகள் பற்றிய தகவல்கள் கோட்பாடுகளை தொகுத்திருக்கிறது. வராகமிகிரர் வாழ்ந்த காலகட்டத்தில் சமகாலத்தவரான ஆர்யபடர் (Arya Bhata) "ஆர்யபடீயம்" என்ற சாஸ்திரத்தை உருவாக்கியிருக்கிறார். அவரும் கணிதம், வானஇயல் குறித்து எழுதியிருக்கிறார்.

பிஹார் மானிலத்தைச் சேர்ந்த ஆர்யபடர் நாலந்தா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவியில் இருந்தவர். தென் இந்தியாவில் வராகமிகிரருக்கு பின் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் பாஸ்கரர் செய்யுள் வடிவத்தில் வான இயலை தொகுத்ததாக கூறப்படுகிறது.

பாஸ்கரர் தன் மகள் ´லீலாவதி´க்காக கணித நூல் இயற்றியதாகவும் அக்பர்பாதுஷாவின் கட்டளைப்படி பாரசீக மொழியில் அவை மொழிபெயர்க்கப்பட்டதாகவும் பிரான்ஸ் நாட்டில் பழைமை நூல் ஒன்றில் குறிப்பு காணப்படுகின்றது. அந்நூலில் எண் கணிதம் Arithmetic வடிவ கணிதம் Geometry பற்றிய பல குறிப்புகளை பாஸ்கரர் குறிப்பிட்டிருக்கிறார். அல்ஜீப்ரா கணிதம் மற்றும் கிரகம் கோள கணிதம், வான இயல், திரிகோணமிதி (Trigonometry) பற்றிய கோட்பாடுகளையும் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரர் குறிப்பிட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் சித்தர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சித்தனைப்பற்றி படிக்கும் போதும் இன்றைய விஞ்ஞானிகள் நினைவுக்கு வருவதை தவீர்க்க முடியவில்லை.

- தமிழச்சி
18/10/2008

 

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel