புராணம்

யாகூசா = ஜப்பான் தாதாக்கள்!

yakuza1


ஜப்பான் என்றதும் நினைவுக்கு வருபவர்கள் "யாகூசா" (Yakuza) தாதாக்கள். உடல் முழுவதும் பச்சைக்குத்தி இருப்பது இவர்களின் அடையாளம். கராத்தே, ஐக்கீடோ, கத்திச்சண்டைகள் என வெளுத்துக்கட்டுவதை கண்டால் ஜப்பான் போலீஸ் கூட அரண்டுவிடும்.

"யாகூசா" எப்படி உருவாகியது என்ற வரலாற்று நிகழ்வை பார்ப்போம்...

அந்த காலத்தில் ஜப்பான் ராஜாக்களை பாதுகாக்கும் தற்கொலைப்படை வீரர்களின் கொள்கைகளைப் போல் தங்களை பாவித்துக் கொண்டு உருவாக்கியது தான் இந்த யாகூசா அமைப்பு.

Oyabun = இயக்கத்தின் தலைவர் (முதல் இடம்)
Wakagashira = முதல் தலைவர்
Shateigashira = இரண்டாவது இடத்தில் இருக்கும் தலைவர்.
Saiko- komon = சட்டத்தை படித்தவர்கள்,
கணக்கர்கள். (Shinglin, kaike இதில் அடக்கம்)
Kyodai = பெரிய சகோதரர்கள்.
Shatei = சின்ன சகோதரர்கள்.

என இருக்கின்றது. மேலும் யாகூசா அமைப்பில் 4- பிரிவுகள் இருக்கிறது.

1. Yamaguchi-gumi = 1915-இல் உருவாக்கப்பட்டது. 21000- உறுப்பினர்கள் (அடிஆட்கள்) இருக்கிறார்கள். தலைமை கோபே (Kobe) என்ற இடத்தில் இயங்குகிறது. இந்த இயக்கத்திற்கு ஜப்பான் முழுவதும் கிளைகள் உண்டு. மொத்தம் 750-கிளைகள் இருக்கின்றது. தற்போதைய தலைவன் பெயர் Shinobu Tsukasa. இந்த இயக்கம் முதல் இடத்தில் இருக்கின்றது.

2. Sumiyoshi - rengo = 8000- உறுப்பினர்கள் (அடிஆட்கள்) 177- கிளைகள், தற்போதைய தலைவன் பெயர் Shigeo nishiguchi.

3. Inagawa - Kai = 5000 உறுப்பினர்கள் (அடிஆட்கள்) 313- கிளைகள், தற்போதைய தலைவன் பெயர் Kakuji inagawa.

4. Tao Yuai Jigyo Kummiai = இந்த அமைப்பை உருவாக்கியவர் பெயர் Hisayuki Machii கொரியாவைச் சேர்ந்தவர். 1923- பிறந்த இவர் 2002-இல் காலமானார்.
1000- உறுப்பினர்களும் (அடிஆட்கள்) 6- பிரிவுகளும் உள்ளன. இவர்கள் Tokyo என்ற இடத்தில் மட்டும் செல்வாக்கு பெற்று இருக்கின்றனர்.

இந்த அமைப்பில் இருப்பவர்கள் தவறு செய்தால் சுண்டி விரலில் பாதி வெட்டப்படும். அது முதல் மன்னிப்புக்கு சமமாக கருதப்படுகின்றது. அதே ஆள் அடுத்த முறையும் தவறு செய்தால் ஆளே வெட்டப்படுவார். (கொலை செய்யப்படுவார்) பஞ்சாயத்து செய்வதும், ஆள்வைத்து அடிப்பதற்கும் மக்கள் இவர்களிடம் வருவதுண்டு. ஜப்பான் அரசியல்வாதிகளுக்கு இவர்கள் தான்
அடி ஆட்கள். ஜப்பான் போலீஸ் கூட தங்களால் தீர்க்க முடியாத
பிரச்சனையை இவர்களிடம் சொல்லி தீர்த்துக் கொள்வதுண்டு.

இந்த தாதா குரூப்பில் ஆண்கள் மட்டும் இருக்கிறார்கள். தற்போது நான்கு குருப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் யாகூசாவில் 1- லட்சம் வரையில் உறுப்பினர்கள் (அடியாட்கள்) இருக்கிறார்கள். இந்த அமைப்பின் கொள்கைகள் சில......

1. நல்லவர்களுக்கு தொந்திரவு கொடுக்கக் கூடாது.

2. அடுத்தவன் மனைவியை விரும்பவோ, கற்பழிக்கவோ கூடாது.

3. திருடக் கூடாது.

4. சார்ந்திருக்கும் அமைப்புக்கு துரோகம் செய்யக்கூடாது.

5. போதை பொருட்கள் உட்கொள்ளக் கூடாது.

6. மேலதிகாரிகளின் கட்டளைகளுக்கு கீழ் படிந்தும், அடிமையாகவும் இருக்க வேண்டும்.

7. எந்த அமைப்பில் இருக்கின்றோம் என்பதை உயிரே போனாலும் வெளியே சொல்லக்கூடாது.

8. 4-குருப்புக்குள் அடிதடி, குத்து, கொலை என செய்துக் கொள்ளலாம். ஆனால் பொதுமக்களை அடிப்பதோ, கொல்வதோ கூடாது.

என இன்னும் சில கொள்கைகள் உண்டு. ஆனால் நாளடைவில் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. அஜாக்கிரதைப் போக்கும் அட்டூழியங்களும் அதிகரித்த போது 1945-இல் இருந்து ஜப்பான் அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. ஆனாலும் சமூகத்தில் இன்னும் ஜப்பான் தாதாக்களின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இன்னும் தாதாக்கள் வருடத்திற்கு ஒருமுறை விழா எடுத்து குதுகுலமாக இருக்கிறார்கள்.

தமிழச்சி
11/01/2007


 

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel