அரசு உலர்ந்து உதிர்வது!

312246_123596554405576_120331151398783_130758_2125134_n


ஜெர்மன் நாட்டு மக்களிடம் புரட்சி குறித்து ´ஒய்கென் டுரிங்´ கூறுகிறார்:
"வெற்றிகரமான அறநெறித்துறையிலும், ஆன்மீகத் துறையிலும் அளவு கடந்த ஆர்வமும், வேகமும் அளித்திடுவதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டு பலாத்காரச் செயலை முன்னெடுக்கும் போது அதைப் பிரயோகிப்பவரையே சீரழியச் செய்கிறது" என்று ´ஒய்கென் டுரிங்´ கூறியபோது,

எங்கெல்ஸ், ´ஒய்கென் டுரிங்´குக்கு மறுப்பு-7' என்னும் சிறு நூலை எழுதுகிறார். [இவை மூன்றாவது ஜெர்மன் பதிப்பு. பக்கங்கள்: 301-03]

"..... வரலாற்றில் பலாத்காரம் இன்னொரு பாத்திரமும் எடுக்கிறது. மார்க்ஸின் சொற்களில் சொல்வதென்றால் புதிய சமுதாயத்தைக் கருக் கொண்டுள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்துக்கும் பலாத்காரம் மருத்துவத் தாதியாய்ச் செயல்படுகிறது. சமூக இயக்கமானது செத்து மடிந்து இறுகிப்போய்விட்ட அரசியல் வடிவங்களை தகர்த்துக் கொண்டு பலவந்தமாய்த் தனக்குப் பாதை வகுத்துக் கொள்ள உதவும் கருவியாய்ச் செயல்படுகிறது. இவை குறித்து ´டுரிங்´ ஒன்றும் குறிப்பிட்டிருக்கவில்லை.

பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாதது என்றார் மார்க்ஸ். பலாத்காரப் புரட்சி பற்றிய திட்டவட்டமான கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப்பதியச் செய்ய வேண்டும் என்பது மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகளில் மிக முக்கியமான தத்துவமாகும். [பொது விதிக்கு இணங்க பலாத்காரப் புரட்சியின் வாயிலாகவே நடந்தேற முடியும் என கம்யூனிஸ்ட் அறிக்கை பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாது என்பதை பகீரங்கமாக அறிவித்திருக்கிறது.]

மார்க்ஸிம், எங்கெல்சும் உணர்ச்சி வேகமோ, உத்வேக முழக்கமோ, 'தடியெடுத்தவன் தண்டல்காரனாவான்' என்று பலாத்காரப் புரட்சியை எடுத்துச் சொல்ல, வன்முறையை ஊக்குவில்லை.

புராதன காலத்தில் அடிமையுடையக் குடிகளின் அரசாகவும், இடைக்காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த போதும் அதற்கு ஜனநாயகம், மக்களாட்சி என்றும், மிகச் சிறந்த அரசு முறையென்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசிலும் கூலியடிமையில்தான் மக்கள் இருக்கிறார்கள் என்பதையும், ஒவ்வொரு அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கியாளுவதற்கான தனிவகை சக்திகளாக இருக்கிறது என்பதை முன்வைத்தும் எந்த அரசும் சுதந்திரமானதும் அல்ல, மக்கள் அரசும் அல்ல என்று மார்க்ஸ்சும், எங்கெல்சும் 1870, 1880-ஆம் ஆண்டுகளில் மார்க்ஸிய தோழர்களுக்கு தெளிவாக விளக்கி கொண்டிருந்தனர்.

'அரசு உலர்ந்து உதிர்வது' என்ற கருத்து வளத்தில் எங்கெல்வின் வாக்குவாதத்தில் நவீன கால சோஷலிஸ்டுக் கட்சிகள் அரசு ஒழிக்கப்பட வேண்டும் என்ற வாதத்திற்கு பதிலாக உலர்ந்து உதிர்ந்துவிடும் என்ற வாக்கியத்தை மட்டும் [´அரசு´ என்ற வாக்கியம் தவீர்த்து] சோஷலிச சிந்தனையில் இடம்பெறச் செய்திருக்கின்றனர். மார்க்ஸிய கோட்பாட்டை சந்தர்ப்பவாதமாய்ச் சிறுமைப்படுத்தி சோசலிஷம் உருவாக்கும் வியாக்கியானம் பலாத்காரமின்றி புரட்சி இன்றி காலப்போகில் நடந்தேறும் மாறுதல் என்பதே உலர்ந்து உதிர்வது என்னும் வெட்டி சிதைக்கப்பட்ட வாக்கியம் புரட்சியினை நிராகரிக்கும் கருத்தை முன்வைக்காவிட்டாலும் நிச்சயமாய் புரட்சி முனை மழுங்கச் செய்யும் கருத்தென்றே மார்க்ஸ் எங்கெல்ஸ் குறிப்பிடுகின்றனர்.

மார்க்ஸியத்தை திரித்துப் புரட்டு பேசும் சோஷலிஸ வியாக்கினத்தினால் முதலாளித்துவ வர்க்கம் மட்டுமே பலனடையும். எங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுகிறது என்றார். இக்கூற்று 1871-இல் பாரிஸ் கம்யூன் அனுபவத்தை முன்வைத்தே சொல்கிறார்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி முதலாளித்துவ அரசை ஒழித்திடுவது குறித்து எங்கெல்ஸ் பேசுகிறார்.

"முதலாளித்துவ அரசு உலர்ந்து உதிர்வதில்லை. புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கத்தால் ஓழிக்கப்படுகிறது" என்கிறார் எங்கெல்ஸ்.

வரலாறு இவ்விதம் தான் எழுதப்படுகிறது. மாபெரும் புரட்சிப் போதனைகள் எல்லாம் வார்த்தைக்கு வார்த்தை விமர்சிக்கப்பட்டு வேறு வேறு வியாக்கியானம் கூறப்பட்டு நடப்பில் உள்ள அற்பவாதத்திற்கு ஏற்ற முறையில் உருவாக்கப்படுகிறது. கொச்சைப்படுத்தப்பட வேண்டும் என்னும் நோக்கில் புரட்சி படுமோசமான கொடுர செயலாக மக்களுடைய மனதில் ஆழப்பதியப்பட்டு தப்பெண்ணமாய் இறுகிவிடும்படி வளர்க்கப்படுகிறது.

ஜனநாயகம் என்னும் வார்த்தை முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மெருகிட்டு மினுக்கச் செய்வதும் இல்லாமல் சோசலிசம் விமர்சனத்தைப் புரிந்து கொள்ளவும் தவறிவிடுகிறது. ஜனநாயகக் குடிஅரசு முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு மிகச் சிறந்த அரசு அமைப்பாகும் என நம்மை ஆதரிக்க வைக்கிறது. ஆனால் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசிலும் மக்கள் ஒடுக்கப்படும் தத்துவமே இருக்கிறது.

எனவே, ´அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கியாளுவதற்கான தனிவகை சக்தியே ஆகும். ஆகவே எந்த ஒரு அரசும் சுதந்திரமானதும் இல்லை. மக்கள் அரசும் இல்லை.´வரலாறுகளில் உருவான புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றையும் பரிசீலித்து குறிப்பிட்ட புரட்சி ஒவ்வொன்றின் அனுபவத்தைப் பகுத்தாய்வதன் மூலம் மார்க்ஸிம், எங்கெல்சும் தெளிவாக விளக்கியதுடன் அல்லாமல் "அரசும், புரட்சியும்.." என்ற நூலில் மிகத் தெளிவாக அரசு அமைப்பு குறித்து விவரிக்கின்றனர்.

- தமிழச்சி
29/11/2011


பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel