சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை!

Charuwriter


கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் இணையம் வாயிலாக உலகை வலம் வந்த சராசரி தமிழ் பெண். அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது. இப்படி 6 மாதங்களாத்தான் இணையத்தின் மூலமாக வெளி உலக தொடர்புகளோடு இயங்கிக் கொண்டிருந்தார் அவர். 

நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், நிறைய வாசிக்க வேண்டும் என்ற அறிவுத் தேடலையும் குற்றமாக எந்த மனிதனாலும் கூற முடியாது. அந்த ஆர்வமே அப்பெண்ணிடம் மிகுதியாய் இருந்திருக்கிறது என்பதை அவருடன் பேசியதில் இருந்து உணர முடிகிறது. அப்படி இருக்க அவர் சந்தித்த பிரச்சனைதான் என்ன?

மீண்டும் படபடப்பாக பேச ஆரம்பிக்கிறார் அவர்.

"பேஸ்புக் வந்த பிறகு புதிய நட்புகளை ஏற்படுதிக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் மிக கவனமாக நட்புகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தேன். கவிதைகளை தொடக்கத்தில் பேஸ்புக் பக்கத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். விருப்பத் தேர்வுகளாக சிலரிடம் இருந்து கருத்துக்கள் வந்த போது மகிழ்சியாக இருந்தது. எனது கவிதை ஒன்று ஓர் வார இதழில் வெளிவந்த போது கவிதைகள் எழுதும் ஆர்வமும் தீவிரமானது.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பிரபல எழுத்தாளர்கள் கூட இருக்கிறார்கள் என்று முகவரிகளை கொடுத்தார். சில எழுத்தாளர்கள் தளத்தில் வாசகியாக இணைந்து கொண்டேன். அப்படித்தான் சாரு நிவேதிதா வாசகர் குழுவில் இணைந்தேன். ஆனால் சாருநிவேதிதா படைப்புகள் எதையும் நான் வாசித்திருக்கவில்லை. இணையம் மூலமாகவே அவருடைய பெயர் பரிச்சியம் ஏற்பட்ட பின் அவரது வாசகர் வட்டத்தில் இணைந்தேன்.

முதன் முறையாக அவருடன் சாட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தொடக்க நிலையில் மரியாதையாகத் தான் பேசினார். சில நாட்களுக்கு பின் அவருடைய புத்தகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரிடம், "உங்கள் புத்தகம் எதையும் வாசித்ததில்லை" என்றேன். உடனே அவருடைய இணையதள முகவரியை கொடுத்தார். வீட்டு முகவரி கொடுத்தால் புத்தகம் அனுப்புவதாக கூறினார். சிறிது தயக்கமாய் இருந்தாலும் பிரபலமான ஒருவர் கேட்கிறாரே என்று வீட்டு விலாசத்தை கொடுத்தேன். கூடிய சீக்கிரம் புத்தகம் அனுப்புவதாக கூறினார். மேலும் சில நாட்களுக்கு பின் மிக உரிமையாக பேச ஆரம்பித்தார். 'செல்லம்', 'கண்ணு', 'புஜ்ஜி', 'வாடா', 'போடா' என ஆரம்பித்த போது மிகுந்த சங்கடமாக எனக்கு இருந்தாலும் எனது அப்பா வயதுடையவராக கருதியதால் ஏதோ அன்பாக பேசுகிறார் என்று பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சில நாட்களில் எனது கவிதைகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். அதனால் மேலும் நான் எழுதி இருந்த கவிதைகளை ஆர்வமாக அவருக்கு அனுப்பினேன். வாசித்துவிட்டு அருமையாக இருப்பதாக பாராட்டினார். என்னை குறித்து அவரது தளத்திலும் ஓர் கட்டுரை எழுதினார். இதன் தாக்கம் பின்னாலில் எப்படி இருக்கும் என்பதை அப்போது நான் உணரவில்லை.

அதற்கு பின் அவரோடு சாட் செய்த போது ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேச ஆரம்பித்தார். அதிர்ச்சியடைந்த நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் பயந்தேன். என்னுடைய சுபாவம் எனக்கு எடுத்தெரிந்து பேசும் தைரியத்தை கொடுக்கவில்லை. ஆனால் சில நண்பர்களிடம் இது குறித்து கூறினேன். பிறகுதான் சாருவின் படைப்புகள் குறித்தும் அவருடைய நடத்தைகள் குறித்தும் சில நண்பர்கள் எச்சரிக்கை செய்தார்கள். நான் தவறான இடத்தில் இருப்பதாக தோன்றியது. மேலும் சாரு நிவேதிதாவின் வாசகர் பேஜ் பக்கத்தில் நடக்கும் விவாதங்கள் ஆபாசமானதாகவும் இருந்ததால் இதில் இருந்து விலகி விட வேண்டும் என்று தோன்றியது. அதனால் சாட் மற்றும் வாசகர் வட்டத்தில் இருந்தும் விலகிக் கொண்டேன். இத்தோடு சாருவும் நிறுத்தி இருந்திருக்கலாம். ஆனால் பேஸ்புக் பகுதியில் என்னை குறித்து நேரடியாக எழுதிய சில கருத்துக்களால் மனவுளைச்சல் ஏற்பட்டது. அவருடைய சில வாசகர்களும் மறைமுகமாய் என்னை தாக்கி எழுதினார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இணையத் தொடர்புகளில் இருந்து விலகி விடலாமா? என்று தோன்றியது.

சாரு வாசகர்களின் மறைமுகத் தாக்குதல்களையும் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சில நண்பர்கள், 'இத்தோடு விட்டுவிடு. பிரச்சனையை வெளியே சொல்லாதே' என்கிறார்கள். என்னால் முடியவில்லை. ஏன் இப்படி?  நான் என்ன தவறு செய்தேன்? எந்த குற்றமும் செய்யாத நான் ஏன் குற்றவுணர்ச்சியோடு இருக்க வேண்டும்.  இதற்கான பதில் தான் தற்போதைய தேடலாய் எனக்குள் இருக்கிறது. இனி நான் என்ன செய்வது? நீங்களே கூறுங்கள்" என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.

அவரின் தகவல்களை உறுதிபடுத்தும் நோக்கத்தோடு ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தோம். முதலாவதாக சாருவுடன் செய்த சாட் அனைத்தையும் நிதானமாய் வாசித்தோம்.

மே மாதம் 22.05.2011- இல் சாட் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வாசகர்களில் ஒருவர் என்ற அறிமுகத்துடன் பெண் பதிவரின் அறிமுகம் செல்கிறது. சில நாட்கள் சாதாரண நலன் விசாரிப்புகளுடனே சாட் தகவல்கள் உள்ளன. மே 31-இல் சாருவின் அணுகுமுறை மாறி இருக்கிறது. 'நீங்கள்' என்கிற வார்த்தையில் இருந்து டா, செல்லம், கண்ணு போன்ற சொல்லாடல்களை உபயோகித்திருக்கிறார். உரையாடலில் பெண் பதிவரின் சங்கடப்படும் தொனிகள் தென்படுகின்றன. அதன் பின் ஜீன் 02.06.2011 அன்று நடைபெற்ற சாட்டில், "கனிமொழியிடம் (முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்) இருந்த காதலுக்கு பின் இப்போதுதான் உன்னைப் பார்க்கும் போது காதல் வருகிறது என்று குறிப்பிடுகிறார். அப்போது இப்பெண் பதிவரின் பதிலில் அதிருப்தியை பார்க்கிறோம். தன்னை வாசகியாகவே முன்னிருத்தி உரையாடலை முடிக்கிறார். அதற்கு பின் ஜீன் 12.06.2011 அன்று நடைப்பெற்ற சாட் உரையாடலில் சாரு மிக மோசமான பாலியல் கிளர்ச்சி வார்த்தைகளை உபயோகித்தது காணப்படுகிறது. அதில் சில வாசகர்களின் பார்வைக்கு.

Dim lights Embed Embed this video on your site

இவ்உரையாடலின் போதே தனது நண்பர்கள் பட்டிலில் இருந்து சாருவை நீக்கியதோடு வாசகர் குழுவில் இருந்தும் நீங்கிக் கொள்கிறார். ஆனால் சாரு அதே தேதியில் (ஜூன் 12) தனது வாசகர் பக்கத்தில் இப்பெண்ணை கேவலப்படுத்தி ஆண்மையத் திமிரோடு எழுதுகிறார்.


charu_comment_on_xxx

மேற்குறிப்பிட்ட சாருவின் அயோக்கியத்தனமான பதிலை பாருங்கள். 23 நாட்கள் வாசகர் வட்டத்தில் இணைந்து, 13 முறை சாட் செய்து பேசிய பெண்ணை, 'தனது நோக்கத்திற்கு இணங்கவில்லை என்றதும், அவள் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டாள் என்பதை அறிந்ததும் சாட்டுக்குள் நடத்திய ரவுசுளை மறந்துவிட்டு, யோக்கியவான் பொங்கி எழுந்து வாசகர்கள் மத்தியில் 'போதனை' செய்கிறார். இந்த அயோக்கியனின் யோக்கியதை 'மைனர் குஞ்சு' ரேஞ்சுக்கு இருக்க, பாதிக்கப்பட்ட பெண் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதும், இணையத்தில் இருந்து விலகிக் கொள்வதும்தான் நியாயமான செயலா? வாசகியாக அறிமுகமாகும் பெண்களிடம் சாட்டுக்குள்ளும், போனிலும் 'காமரசம்' போதிப்பதும், பாலியல் கிளர்ச்சியில் உளறுவதும்தான் சாருவின் யோக்கியதை என்றால் சாருவின் வாசகர்கள் அந்த கருமத்தை நியாயப்படுத்த முயல்வீர்களா?

இச் சம்பவத்தை முன்வைத்து சாருவுக்காக வக்காலத்து வாங்க வருபவர்கள் தங்கள் அம்மா, மனைவி, மகள்களை சாருவின் ஆன்லைனில் விட்டுவிட்டு பஞ்சாயத்துக்கு இங்கே வாருங்கள்! காத்திருக்கிறோம்!

தமிழச்சி
20.06.2011


Comments  

 
-1 # niroo 2011-06-20 13:47
he is crazy :sad:
Reply | Reply with quote | Quote
 
 
+11 # கூத்தாடி 2011-06-20 14:06
இதைப் பற்றி பதிவு போட்டால் மட்டும் போதுமா?இந்த ஜந்து திருந்தி விடுமா? அல்லது நம் மக்கள் தான் விழித்து விடுவார்களா??

இந்த பெண் தன் குடும்பத்தை மீறி செயல்பட முடியாது சரி ஆனால் இந்த நாயிடம் ஏமாந்த எத்தனையோ பேர் இருப்பார்களே அவர்களில் யாரையாவது வைத்து சைபர் கிரைமில் புகார் செய்யலாமே??
Reply | Reply with quote | Quote
 
 
+5 # 121 2011-06-20 14:41
Pl Translate in English , Need to read karala peoples ,

Done miss madam .

Also change Youtube File name to english
Reply | Reply with quote | Quote
 
 
+13 # sankar 2011-06-20 15:49
சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை!

பெரிய மனிதன் போர்வையில் ஒரு காம பிசாசு!
பெண்கள் ஜாக்கிரதை!
Reply | Reply with quote | Quote
 
 
0 # puthiyaulakam 2011-06-20 16:12
:-| இவ்வாறான விசமிகளை இனங்காட்டியமைக் கு நன்றி... உங்கள் காணொளியை நாமும் எமது தளத்தில் பகிர்ந்து கொள்கிறோம்.... நன்றி.
Reply | Reply with quote | Quote
 
 
-1 # nila 2011-06-20 16:20
செம சூடு
please remove word verification from blog settings
Reply | Reply with quote | Quote
 
 
+14 # Madhavan 2011-06-20 16:40
இந்த நாயா பத்தி வெளிப்படுத்தியத ற்கு நன்றி. இவன் நித்யானந்தாவை பற்றி ஓரூ காலத்தில் பெருசா பேசினான். பின்னாடி அவரை பற்றி வெளியில் தெரியவந்தப்பின் ரொம்ப நல்லவன் மாதிரி அவர் மேல் முதலில் கல்லை எறிந்த்வனும் இவன்தான். எங்கே தன் பொண்டாட்டியையும ் ஏதும் பண்ணியிருப்பனோன ்னு கோவம். இவன் நடித்த சீன்களை நீக்கியதற்காக மிஷ்க்கினை மட்டம் தட்டினான். இவன் ஒரு வீணாப்போன நாயி. இதுக்கெல்லாம் கவலைபடாதீங்க சகோதரி.
Reply | Reply with quote | Quote
 
 
+3 # sya 2011-06-20 17:00
He is very sick.. send these chats to his wife and azhagiri.. let them chop off his manhood... otherwise it might erect seeing any photograph
Reply | Reply with quote | Quote
 
 
0 # premkumar 2011-06-22 06:48
*****let them chop off his manhood*****

hey i dont think he has one.

ஒரு சொலவடைதான் ஞாபகத்திற்கு வருது

“”””கொலைக்கிற நாய் கடிக்காது””””””


அவரால முடியாதுன்னு நினைக்கிறேன். அதனால அவரு மனசு வக்கிரமடைந்து விட்டது. இந்த வயசுல இது ரொம்ப சீரியஸ்கேஸ். அவரு ஒடனே மருத்துவர ச்ந்திக்கிறதுதா ன் நல்லது.
Reply | Reply with quote | Quote
 
 
+9 # S.RajaPriyan 2011-06-20 17:08
சாரு அவரோட பொண்ணு மெயில் ஐடியா கொடுப்பாரா? நாமளும் கொஞ்ச பேசிப் பாப்போமே அவரு மாதிரி அப்போ தெரியும் வலி என்னன்னு......

இப்டி நான் பேசனதுக்கு அவர பத்தி பேசாம அவுரு பொண்ண பத்தி ஏன் பேசற? ன்னு பொங்கி எழும் எல்லாருக்கும் நான் ஒன்னு சொல்லிக்கரன் அந்தாளு பேத்தி வயசுல இருக்கற பொண்ணுகிட்ட அவருஅப்படியெல்ல ாம் பேசறது சரின்னா, நான் அவரு பொண்ணு அப்டி பேசறதும் எந்த வித்துலயும் தப்பு இல்ல.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # thenisaaral 2011-06-20 18:46
விளாசீட்டீங்க. இத சட்டப்பூர்வமா ஒண்ணும் செய்ய முடியாதோ? அந்த பெண்ணுக்கு மிகுந்த உளைச்சலைக்கொடுக ்கும் இல்லையா? கெட்ட வார்த்தை பேசலேன்னா இவருக்கு தூக்கம் வராதுபோல. இவர் வீட்டு குழந்தைகளிடம் கெட்ட வார்த்தை பேசுவாரா? அது எப்படி குழந்தைகளின் நலன் கருதி தவிர்ப்பாரோ, சமுதாயத்திற்கும ் இதே விதி தானே? எது எப்படியோ. மலினமான முறைகளின் மூலம் எல்லருக்கும் தன் பெயர் தெரியப் பண்ணிவிட்டார். இப்போது இது வேறு. தன் உள்மன வக்கிரத்தை இவர் தீர்க்க, சிலரும் அந்த செய்கையில் தன் வக்கிரம் தீர்த்துக்கொள்க ிறார்கள் போல தெரிகிறது.
Reply | Reply with quote | Quote
 
 
+2 # BG 2011-06-20 21:52
Thanks for this warning. I hope people will be a bit more careful with such so called intellectual pigs.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Pakutharivu 2011-06-21 00:21
She should prefer police complaint under Cyber Crime Act and Domestic Violence Act against that writer.
Reply | Reply with quote | Quote
 
 
-1 # Prakash 2011-06-21 05:16
Avan Oru Saiko...Athan ipadi pannitan..antha ponna police la complaint kodukka sollunga..intha chatinga aatharama vachi complaint kodukka sollunga...intha blogspot la periya aalunga nu sila per sollikittu avanukku vakalathu vangitu irukunga..athula oru nayum vanthu comment podula...
Reply | Reply with quote | Quote
 
 
-1 # Achaani 2011-06-21 06:13
Cant that girl give complain to cyber crime police. This guy should not use the internet in future. idiot. Kani pls put some case on him. you can only take best action against him.
Reply | Reply with quote | Quote
 
 
0 # R Sathyamurthy 2011-06-21 07:27
இவரை துக்ளக்கில் எப்படி எழுத விட்டார்கள்? இவரை துரத்த வேண்டும் துக்ளக்கிலிருந் து. செருப்பால் அடிபட வேண்டியவர் இவர். பாலியல் கொடுமைக்காக இவர் மேல் போலீஸ் புகார் கொடுக்கலாம்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # indira gandhi 2011-06-21 10:12
இவனை சாணி சிதற, அடிச்சு துவைக்கனும்னு கோபம் வருது. இவனுடைய பாலியல் எழுத்துக்களுக்க ாக ஆரம்பத்திலேய இவனை காயடிச்சு விட்ருக்கனும். நம்ம தமிழ் சமூகம் அவனை வளர்த்து விட்டதனால இலக்கிய உலகம் சார்ந்த பெண்களை நான் தான் வளர்த்துவிட்டேன ்னு கதையடிக்கிறான்.இலக்கிய உலகு சார்ந்த ஆண்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம் இது, இனிமேலும இது ஏதோ வெறுமனே பெண்கள் பிரச்சினை என்று ஒதுங்கி இருந்து விடாதீர்கள் நண்பர்களே.
Reply | Reply with quote | Quote
 
 
+2 # srikanth 2011-06-21 13:00
அன்புள்ள தைரிய தமிழச்சிக்கு
இணைய நண்பர்கள் சார்பாக முதலில் நன்றி நவில்கிறேன்
அக்காலத்தில் புலியை முறத்தால் அடித்தவள் நம் தமிழச்சி
இக்காலத்தில் பசுதோல் போர்த்திய கரும் (கரும) புலியை (சா.நி) தைரியத்தால் அடித்தவள் இந்த தமிழச்சி
இணையத்தில் இணைந்திருக்கும் தமிழர்கள் அனைவர்க்கும் ஓர் வேண்டுகோள்
இந்த தமிழச்சியை இன்று நாம் ஆதரிக்கவிட்டால் அந்த ஆண்டவனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Sudheer Sendhil 2011-06-21 15:31
தமிழச்சி அவர்களுக்கு,

உங்களுடைய இந்த சமுக விழிப்புணர்வு போராட்டத்திற்கு என்னுடைய தார்மிக ஆதரவு என்றும் உண்டு. சாரு செய்தது மன்னிக்க முடியாதது மட்டுமல்ல, தண்டிக்க வேண்டியதும்கூட. தாங்கள் ஒரு பெரியாரியவாதியெ ன்று அறிகிறேன். வாழ்த்துகள்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Jeyakumar 2011-06-21 15:50
its correct,rights for you
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Paa Vee 2011-06-21 16:43
கடைசி இரண்டு வரிகள் முகத்தை சுழிக்க வைக்கிறது!!!!!!
அதை படித்த பிறகுதான் இது உண்மையா பொய்யா என்ற கேள்வி எழுகிறது?
Reply | Reply with quote | Quote
 
 
0 # srinivasan 2011-06-21 17:37
இவரின் இலக்கிய வாசகர்கள் இவருடனான நட்பை பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணமிது, சுய விளம்பரத்திற்கா க அலையும் இவரை போன்ற மனிதர்களை புறக்கணிப்பதே சரியான விடயமாகும்.
Reply | Reply with quote | Quote
 
 
+2 # Munna 2011-06-21 19:30
Thoo...
Reply | Reply with quote | Quote
 
 
+2 # Rama Sandow 2011-06-22 08:14
சாருவை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடிக்கவேண்டும்..... அறிவு கெட்ட நாய்
Reply | Reply with quote | Quote
 
 
0 # ASH 2011-06-22 09:12
Honestly am not surprised, though I read his blog I always stay away from any direct communication with him - how can anyone who can sell purely on sex be not a pervert in real life am sorry if it sounds like generalising I cant go beyond 4 pages of his books and I think he is a bloody psycho - My prayers to the affected girl - take care girl just forget this nonsense and move on in life!
Reply | Reply with quote | Quote
 
 
0 # vidhyakishore 2011-06-22 11:13
நீயா நானாவில் சாரு நிவேதிதா எவ்ளோ அருமையாக பெண்களை பற்றி பேசினார் என்பது எனக்கு தெரியும்....அவரா இப்படி என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது....நம்புவது கடினம் என்றாலும் ,குற்றம் சாட்டுபவர் எனக்கு நல்ல நட்பு என்கிற ஒரே காரணத்திற்க்காக ,சாருவை வன்மையாக கண்டிக்கிறேன்....பெண்களை தயவு செய்து முன்னேற விடுங்கள்...நீங்கள் சீரோ டிகிரி எழுதி இருப்பதை மறந்து விடாதிர்கள்.....உங்கள் பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள் சாரு....
Reply | Reply with quote | Quote
 
 
+4 # sakthivel 2011-06-23 12:28
@ vidhyakishore zero degree என்ன திருக்குறளா ? ஏங்க நீங்க வேற அந்தாளுக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ! பொறுக்கி பய பூமிக்கு பாரமா போட்டு தள்ளு ...போட்டு தள்ளு ...
Reply | Reply with quote | Quote
 
 
0 # Sreeranga 2011-06-23 18:55
Hello Thamizhai

To be honest, I am not a big fan your writing but what you have done now is absolutely marvellous. These kind of self-indulgent bas**ds need to be lynched who scare away few Tamil women who come into outside world. His action not only affects the girl concerned but all other girls who want to come into the web/literary world.

You did the right thing by exposing him. Thank you
Reply | Reply with quote | Quote
 
 
+1 # kumar 2011-06-24 08:53
சாரு நிவேதிதா என்பவன் எழுத்தாளன் என்ற போர்வையில் தன்னுடைய காம இச்சைகளை சில sikappu பத்திரிக்கையிலு ம், இணைய தளத்திலும் பிரசுரித்து வருகிறான். அவன் ஒரு காம கொடூரன். அவனை எல்லா பெண்களும் சேர்ந்து செருப்பால் அடிக்கணும். அப்ப தான் அடங்குவான்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Prasanna 2011-06-24 11:30
நன்று..மிக நன்று தோழர்...... . பற்றி கருத்து வெளியிட இந்த அயோக்கியானால் எப்படி முடிகிறது? :oops:
Reply | Reply with quote | Quote
 
 
+2 # Gauthaman 2011-06-24 12:31
இவரால் பாதிக்கப்பட்ட பொண்ணு யாரென்று என்னால் யூகிக்க முடிகிறது. சிறுவயதிலேயே நல்ல கவிதை எழுதும் திறம் படைத்தவர். அவர் மீண்டும் எழுத வரவேண்டும். அதற்கு முன்பு இவரைப் பற்றி வழக்கு தொடுத்தால் நல்லது.

தனது மனைவி அவந்திகாவினை முத்தமிட்டதில்ல ை என்ற சாருவின் சாட் கருத்தைப் படிக்கும்போது, "நீயா நானா"வில் இதே சாருநிவெதிதா, தனது மனைவியை, கடற்கரையில் வைத்து(பொது இடத்தில்) முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தியத ைப் பற்றி கூறி, அதைப் பற்றி கடுமையாக வாதிட்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது! ம் ம் ம்!
Reply | Reply with quote | Quote
 
 
0 # KATHIRAVAN 2011-06-24 13:59
சாருநிவேதிதா என்கிற அயோக்கியனைத் தோலுரித்துக் காட்டிய சகோதரியின் ஆண்மைக்கு வாழ்த்துக்கள்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Rajsekar 2011-06-25 00:59
This guy complained about Vijay TV neeya naana crew in Kumadham. He complained about the show director that they have not paid him the money for attending the show. He also complained that they paid airfare and more money than him for one of the guest from kerela. He also complained that he was dropped home last after dropping other female participants in the show. All these came in Kumudham. Later in the next week show director Antony spoke to him directly and settle his amount. This fellow also cheaply confirmed that he has receive the money.He must really a cheap guy. We can easily guess from the looks. Vijay TV neeya naana should not invite these type of guys.
Reply | Reply with quote | Quote
 
 
0 # sura 2011-06-25 08:28
இச் சம்பவத்தை முன்வைத்து சாருவுக்காக வக்காலத்து வாங்க வருபவர்கள் தங்கள் அம்மா, மனைவி, மகள்களை சாருவின் ஆன்லைனில் விட்டுவிட்டு பஞ்சாயத்துக்கு இங்கே வாருங்கள்! காத்திருக்கிறோ
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Paris EJILAN 2011-06-25 12:44
PEOPLE SHOULD BE EXTERMELY CAREFULL WITH THESE TYPES OF GUYS.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # பரமசிவம் 2011-06-25 16:09
விகடன், குமுதம் போன்ற இதழ்களில் எழுதிப் பிர
பலம் ஆனவன் இந்தப் பொறுக்கி.
இந்தச் செய்தி அந்த இதழ்களில் வெளியாகி, அத்தனை தமிழ் வாசகர்களும் இவன் யோக்கி யதையைத் தெரிந்துகொண்டு காரித் துப்ப வேண்டும்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # பரமசிவம் 2011-06-25 16:15
விகடன், குமுதம் போன்ற இதழ்களில் எழுதிப் பிரபலம் ஆனவன் இவன்.
இவனைப் பற்றிய இந்தச் செய்தி அந்த இதழ்களில் வெளி வர வேண்டும்.
தமிழ் வாசகர்கள் இவன் மீது காரித் துப்ப வேண்டும்.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # kaarigan 2011-06-26 07:57
சாரு ஒரு அயோக்கியப்பயல் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் என விரும்பினேன்.ஏனென்றால் அவனின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்கள் எப்பொழுதுமே பெண்கள், குடி, கூத்தாட்டம், போதை, விஸ்கி, உடல் அங்கங்கள், முத்தம், செக்ஸ் என்றே இருக்கும். இவன் எழுத்துக்கள் அந்த கால சரோஜா தேவி மஞ்சள் புத்தகங்களை நினைவு படுத்தும். இவனை தோலுரித்து காட்டியதோடு இல்லாமல் உரிய தண்டனை வாங்கி தர வேண்டும்.
Reply | Reply with quote | Quote
 
 
+4 # mani 2011-06-28 11:56
சாரு மற்றும் சோ[தா]பா சக்தி போன்ற வக்கிர மனிதர்களை அம்பலப்படுத்திய தோழர் தமிழச்சி பாராட்டுக்குரிய வர்.
ஆண்களில் பெரும்பான்மையின ர் வாய்ப்புக்கிடைக ்கும் வரை யோக்கியர்களாக வேடம்போடுவார்கள ்.ஆனால் சாரு போன்றவர்கள் வாய்ப்பை உருவாக்க எந்த அளவிற்கும் போவார்கள்.இவர் போன்ற ஆட்கள் நிறைய பேர் நாட்டில் இருக்கிறார்கள்.இந்த விசயத்தில் இவர் பேர் ரிப்பேர் ஆவது பற்றி அப்படி ஒன்றும் கவலைப்பட மாட்டார்.இரண்டு நாளைக்கு சரக்கு நல்லா அடிச்சிட்டு அடுத்த வலைய வீச போய்டுவாங்க.வெகுசன இதழ்களில் இந்த செய்தி வந்தால் நன்று.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # sathak 2011-07-08 19:15
லென்ஸ் மாமா காமெடி பீசாயிட்டாரு
Reply | Reply with quote | Quote
 
 
+1 # kadhir 2011-07-27 16:35
So far I have been a reader of charu. I never thought that he is such a perverted man. I welcome the letter of Thamizhachi. I appreciate her boldness. Any one can find out what she writes is true and fact. He is not like Kalki or Sujatha, he is one among some infamous small writers. I happened to read some of his articles in vikatan. Those are not extraordinary. He wrote about the godman Nithyanandha, but he himself tried to behave like him. o.k. I welcome the warning.
Reply | Reply with quote | Quote
 

Add comment

உங்கள் பின்னூட்டங்கள் சைட் அட்மினின் பார்வைக்கு பின்னரே இங்கு வெளிடபடும் .


Security code
Refresh

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel