கனவும், நினைவும்!
"லட்சியக் கனவுகள் நட்சத்திரங்கள் போல்.
வானத்தில் மின்னி நமக்கு திசையை காட்டுகின்றன.
நட்சத்திரங்களை தொடர்ந்து செல்லும் போது
நாம் கீழே பார்த்து நடக்க வேண்டும்.
நாம் தரையின் மீது நடக்கிறோம் என்ற
உண்மையையும், நிதானத்தில் வைத்துக் கொள்ள
வேண்டியதாய் இருக்கிறது."
எதற்கும் ஒரு வரம்பு, ஒரு எல்லைக்கோடு இருக்க வேண்டும் என்பார்கள். நம் வாழ்க்கைக்கும் அப்படித்தான் எல்லாவற்றிலும் ஓர் எல்லைக்கோடு நமக்காக காத்திருக்கிறது.
உலக நடப்புகளும் சொல்லுகின்ற அடிப்படை உண்மைகளை, அனுபவங்களை புறக்கணிக்கவோ, ஜீரணிக்கவோ முடியாமல் இருக்கிறது. சகிப்பு தன்மையும், இயலாமையும், நொந்த மனமுமாய் பலநேரங்களில் என்ன வாழ்க்கைடா இது? என்னும் புலம்பல்கள்.
உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்களாம்....
ஒருவர் கனவுலகில் பறக்கும் லட்சியவாதிகள். அடுத்தவர்கள் மண்ணில் கால்பதிய நின்று எதையும் உலக நடப்புக் கண்ணோட்டத்தோடு செயலாற்றும் லட்சியவாதிகள் என்பார்கள்.
´Practical Persons´- இரண்டு வகையினரும் நாட்டுக்கு தேவைதான். இருப்பினும் செயல்பாடுகள் மட்டுமே அசாத்திய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்துகிறது.
ரோமானிய சக்கரவர்த்தி ´மார்க்கஸ் அரேலியஸ்´ [marcus aurelius] பற்றி வரலாறுகளில் பார்க்கிறோம்.
தத்துவஞானமும், நடைமுறை ஞானமும் இணைந்து செயலாற்றிய லட்சிய மனிதன் அவன். நம் இந்தியாவில் கூட பல தீர்க்கதரசிகள் என்பவர்கள் இருந்திருக்கிறார்கள். பல தத்துவங்கள், ஞானங்கள், ஆயிரம் ஆயிரம் தத்துவ விளக்கங்கள் எல்லாமும்தான் கிடக்கின்றன. அதனால் சமூகத்திற்கு எந்த புண்ணியமாவது இருக்கிறதா?
´மனிதப் பண்புகள்´ என்று நியதி இருக்கிறது. இன்று வரையிலும் நம் சமூகம் அதைப்பற்றி யோசித்தது கூட கிடையாது. ஏன்? தீர்க்கதரிசிகளின் தத்துவங்கள் சமயத்தோடு பின்னிபிணைந்து குலாவி கொண்டிருப்பதா நம் அசட்டைக்கு காரணம்? எப்படி மனிதன் வாழக்கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உலக மக்களுக்கு முன்பு நமது கலாச்சாரம் தான் இளித்துக் கொண்டு நிற்கிறது.
மனிதர்களை வர்ணாசிரம அடிப்படையில் பிரித்து வைத்து தர்மம் என்கிறான். அந்த தர்மங்களைத்தான் நாம் சாகும் வரையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். உலக மக்களின் சிந்தனைகளோடு யதார்த்தங்களை நோக்கி போகாமல் நமக்குள் சேஷ்ட்டைகளை செய்துக் கொண்டிருக்கிறோம். இதுவும் மனிதப்பண்புகளை ஒழித்த கனவு நிலைதான்.
சில தினங்களுக்கு முன்பு ´ஸ்லோகங்கள் நாசமாய் போகட்டும்´ பதிவைப் படித்த ஒருவர் மானவாரியாக கேள்வி கேட்டு மெயில் போட்டிருந்தார். விவாதிக்கலாம்; அருமையான சப்ஜெட்தான். முகம் தெரியாத ஒருவர். எங்கோ ஒளிந்துக் கொண்டு மனுதர்மத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்திய எல்லை வரைத்தான் அது மனுதர்மம். அதற்கு அப்பால் காட்டுமிராண்டித்தனம் என்னும் யதார்த்தங்கள் அதற்குள் இருப்பதை மனிதநேயம் மிக்கவர்களுக்கு தெரியாததா?
நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் எவை? அதை எதனால் நம்மால் தீர்க்க முடிவதில்லை. நம்மால் ஏன் தீர்மாணிக்க முடிவதில்லை? நம்மால் ஏன் அதை அலட்சியப்படுத்திச் செல்ல முடிவதில்லை? நம் இயலாமையும் அறியாமையும் அணுசரித்து போகும் மனோபாவமும் தானே! அதன் மாற்றுக்கோணத்தை நாம் பார்க்க விரும்பாததால் தானே?
கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என கணத்த இரும்பு சங்கிலிகள் பூட்டப்பட்ட உடலோடு ஆயுள் முழுவதும் பாரத்தை இழுத்து இழுத்து ஹீரோக்கள் ரோபோக்களை போல் வலம் வருகிறார்கள். இவர்கள் தான் நாளைய ரோபோக்கள்.
ரோமனிய சக்கரவர்த்தி மார்க்கஸ் அரேலியஸ் அலட்சிய சிரிப்போடு சொல்கிறார்: "எனக்கு அந்நாளைய வெத்துவாதங்கள் தேவையில்லை. நான் ஒரு பறவை போல, நீ இப்படித்தான் இது போல்தான் இப்படியாகத்தான் நடக்க வேண்டும் என்று போதிக்கத் தேவையில்லை. நான் மனிதனாக இருந்தாலே போதும்."
- தமிழச்சி
14/04/2009
| அடுத்தது > |
|---|
பதிவுகள் தேதி வாரியாக
- ► December (4)
- ► November (1)
-
►
October
(84)
- எதற்காக பிறந்தநாள் விழா கொண்டாட்டம்?
- ´சே´வுக்கு செவ்வணக்கம்
- கருத்து முதல்வாதமும், பொருள் முதல்வாதமும்.
- ஒரு தத்துவ வரலாறு தொடக்கத்தில்...
- ஆசிரியர் தினத்தில் சிந்திக்க ஒரு கருத்து...
- மர்மங்களால் பிணைக்கப்பட்டிருப்பது மனிதனா? அவன் சிந்தனையா?
- வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும்.
- நவராத்திரி!
- தீபாவளி!
- துன்பம் தரும் தீபாவளி
- தீபாவளி குறித்து 1929-இல் பெரியார் கூறியவை
- தீபாவளி குறித்து..
- நரகாசுரன்
- அநீதிகளுக்கெதிரான போராளி முத்துக்குமாரன்!
- யோனிகளை ஏன் வெடி வைத்து சிதறடிக்க வேண்டும்?
- வாழ்க்கை மகத்தானது!
- காதல்மணம்!
- காதலோ காதல்! "உண்மைக் காதல்"!!
- ´பர்தா´வை கொளுத்துவேன்!
- நாக்க "மு.க" வேஷங்கட்டி கூத்துக்கட்டறான்...
- பொய் முகங்கள்..!
- பந்தயம் கட்டிக் கேட்கிறேன்!
- நித்தியானந்த சாமியாரின் செக்ஸ் காட்சிகள். தமிழ்நாட்டில் பரபரப்பு!
- "ஜாலி ஜாலி"யென நீ இருந்தால்...
- பெண் ஏன் இப்படியானாள்?
- பெண்கள் சீரழிய காரணங்கள்!
- சமூகத்தின் மதிப்பிடு அறநெறியில்..!
- ஒன்றுக்கும் அஞ்சாதீர்!
- பேசுவதால் என்ன பிரச்சனை?
- விக்டோர் உய்கோ..
- தமிழக ரௌடிகளின் அராஜகமும், அரசு ஆதரவும்
- வணிக நோக்கமற்ற மனித நேய முயற்சியை முன் வைத்து...
- கலைக்குரிய இலட்சணம் இருக்கிறதா?
- அதிகப் பிரசங்கித்தனத்தால் கொள்கைகள் அபத்தமாகிவிடக் கூடாது!
- புஸ்தகங்களைக் கொளுத்தும் கிளர்ச்சி!
- சினிமா!
- இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை!
- தோட்டியும், மலக்குழியும்!
- இனவெறியின் வீழ்ச்சி எப்போது?
- மூலத்துடன் தொடர்பு!
- நரகத்தில் ஓர் வாசகம்!
- இன்றைய சமூக கட்டமைப்பிலும் மனிதன் அடிமையே!
- இந்தியாவில் தொழிலாளர் நிலை குறித்து பெரியாரின் கேள்வி!
- "அயலானை நேசி" என்ற வெத்து வாதம்
- முதல் விந்திலேயே தொடங்கி விடுகிறதா தற்கொலை எண்ணம்?
- வேசிக்கும், திருடனுக்கும் உள்ள உறவைப் போன்றது தி.மு.க - குஷ்பு கூட்டணி!
- "எப்பொழுதுமே ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு இரு!
- கலப்பு திருமணத்தை காந்தி ஏன் ஆதரிக்கவில்லை?
- அரசியலில் கோவணம் கட்டத்தெரியாது தி.மு.க திரிந்த காலமும் இன்றைய தி.மு.க வின் வளர்ச்சியும்...
- "1925 முதல் 1938 முடிய / தோழர் வீரமணி அவர்களிடமிருந்து விடுதலை பெற்ற குடி அரசு இதழ்கள் / 28 தொகுப்புக்கள்"
- ஆக்கிரமிப்பு குணம்!
- கலகமும், புரட்சியும், சமதர்மமும்.
- "நாம் தமிழர்" கட்சிக்காரர்கள் - பொறுக்கித் தின்னும் கூட்டம்!
- பிரான்சில் பர்தா அணியத் தடை!
- வாணரங்கள் ஆட்சி செய்யும் தமிழகத்தில்....
- அரசியல் நையாண்டி!
- “உனது வழி செல், பேசுவோர் பேசட்டும்"
- யார் இந்த ஜகத் கஸ்பர்? - ´சவுக்கு´ அம்பலப்படுத்துகிறார்!
- செம்மொழி மாநாடு - கருணாநிதி குடும்பம் ஆட்டைய போட்ட தொகை எவ்வளவு?
- தி.மு.க முன்னேற்றக் கழகமா? பின்னேற்றக் கழகமா?
- பெரியாரின் தி.மு.க குறித்த நையாண்டி!
- கருணாநிதி அரசின் மக்கள் விரோதப்போக்கு – எழுச்சிக் கூட்டம் : கருத்துரிமைக்கான கூட்டமைப்பு
- தலிபான் தீர்ப்புகள்!
- பெரியாரை கேவலப்படுத்தும் வீரமணி&கோ
- கருக்கிய நாளிலேயே கருக்கொள்கிறோம்!
- ஆகா... இப்படியுமா?
- கலைஞரின் வாரிசு தத்துவங்கள்...
- அக்.2 போராட்டம்: ஓர் உரிமையான வேண்டுகோள்!
- ரம்லத், பிரபுதேவா, நயன்தாரா..
- அவமானம் என்பது மூலதனம் எமக்கு!
- அயோத்தியின் தீர்ப்பில் அயோக்கியத்தனம்.
- தீண்டாமைக்கு எதிராக போராடிய பெரியார் தொண்டர்கள் 3000 ஆயிரம் பேர் கைது!
- ´இந்து லா´ வுக்கு பாராட்டு விழா...
- கலைஞர் ஆஸ்திகனா? திருடனா?
- சீரமைக்கப்பட்ட ஆயிஷா...
- ஆயுத பூஜைக்குள் கலகம்
- தேவை சில பெண் போராளிகள்...
- தேசத் துரோகியாகிறார் அருந்ததி ராய்!
- அண்ணன் ஜட்டியை கழட்ட சொன்னாங்க...
- நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
- மாமனிதர்களின் அந்தரங்கம்..!
- வெளிவருகிறான் கலகக்காரன்
- குழந்தைகள் தினமும் போலி அக்கறைகளும்..
- மாண்புமிக்க பண்புக்கு இலக்கணம் கொடுக்கும் மானமிகு...
- ► September (4)
- ► August (3)
- ► July (6)
- ► June (9)
- ► May (7)
- ► April (5)
- ► March (7)
- ► February (7)
- ► January (9)
-
►
December
(11)
- சீமான் கேடுகெட்ட பிழைப்புவாதி!
- சாதியை மற..
- அறிவிலிகள் கேட்கிறார்கள்...
- தோழர் பெரியார் நினைவுநாள்!
- தோழர் பெரியார் நினைவுநாள்!
- சறுக்குது பெரியார் முழக்கம்...
- தமிழ் தேசியம் பேசும் இன்றைய பார்ப்பனிய கைக்கூலிகளுக்காக..
- சாதித்தோல்...
- ´லைஸிஸ்ட்ராட்டா´
- டாக்டர் ´பாபாசாஹேப் அம்பேத்கர்´ - தீண்டாமையின் அடையாளமா?
- கணக்கு காட்டுகிறேன் கண்ணுடையோர் காண
- ► November (6)
- ► September (1)
- ► August (1)
- ► May (1)
- ► April (1)
- ► February (1)
- ► January (1)




